உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் நீதிக் கதைகள்/வயிறு முட்டிய குள்ளநரி

விக்கிநூல்கள் இலிருந்து

ஒரு பசியுடைய குள்ளநரி ஒரு கூடாகி போன மரத்திற்குள் ரொட்டித் துண்டுகளையும், மாமிசத்தையும் கண்டது. அதை அங்கு சில மேய்ப்பாளர்கள் தாங்கள் திரும்பி வரும் போது எடுத்துக் கொள்ளலாம் என்பதற்காக வைத்து விட்டுச் சென்றனர். உணவைக் கண்டதால் மிகவும் மகிழ்ச்சியடைந்த குள்ளநரி அதில் இருந்த சிறிய துளை வழியாக மரத்திற்குள் சென்றது. அங்கிருந்த அனைத்து உணவையும் பேராசையால் உண்டது. ஆனால் அது வெளியே வர முயற்சித்த போது பெரும் அளவிலான உணவை உண்டதன் காரணமாக அதன் வயிறு முட்டியிருந்ததை அறிந்தது. இதன் காரணமாக அதனால் துளை வழியாக வெளியே வர இயலவில்லை. தன்னுடைய துரதிர்ஷ்ட நிலையைக் கண்டு கீழே விழுந்து சத்தம் எழுப்பியது. அவ்வழியே சென்ற மற்றொரு குள்ளநரி அங்கு வந்தது. என்ன விஷயம் என்று அதனிடம் கேட்டது. வயிறு முட்டிய குள்ளநரியின் நிலையை அறிந்து அது "நீ உன்னுடைய முந்தைய உடல் அளவுக்கு சுருங்கும் வரை இந்த மரத்துக்கு உள்ளேயே இருப்பதை தவிர வேறு வழியில்லை என்று கருதுகிறேன் நண்பா; அதன் பிறகு நீ எளிதாக இங்கிருந்து வெளியே வரலாம்" என்றது.


நீதி: பேராசைப் படாதே.