ஈசாப் நீதிக் கதைகள்/மீனவன்
Appearance
ஒரு மீனவன் ஓர் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தான். தனது வலைகளை ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு கட்டி நீரோட்டத்துக்கு இடையில் வைத்தான். ஒரு வெளிர் மஞ்சள் நிற கயிற்றின் முனையில் கல்லைக் கட்டி தண்ணீரில் அடித்தான். இதன் மூலம் மீன்கள் அச்சமடைந்து தப்பித்து ஓடும் போது அவை வலையில் மாட்டுமென எண்ணினான்.
இதை அருகில் இருந்த உள்ளூர்க்காரன் ஒருவன் கவனித்துக் கொண்டிருந்தான். ஆற்றின் அமைதியைக் குலைப்பதற்காக மீனவனை கண்டித்தான். இதன் மூலம் நீரை கலங்கல் ஆக்குவதாக கூறினான்.
மீனவன் இதற்கு "ஆற்றை கலங்கல் ஆக்காவிட்டால் பசியால் நான் இறந்து விடுவேன்" பதிலளித்தான்.
நீதி: சிலர் என்றுமே மற்றவர்களின் செயல்களை புரிந்து கொள்வதில்லை.