உள்ளடக்கத்துக்குச் செல்

குறிப்பு அறிதல்

விக்கிநூல்கள் இலிருந்து

திருக்குறள் > அமைச்சியல்

701 கூறாமை நோக்ககே குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.


702. ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.


703. குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.


704. குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு.


705. குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்?


706. அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.


707. முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.


708. முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்.


709. பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.


710. நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.


"https://ta.wikibooks.org/w/index.php?title=குறிப்பு_அறிதல்&oldid=2814" இலிருந்து மீள்விக்கப்பட்டது