நன்றியில் செல்வம்
Appearance
திருக்குறள் > குடியியல்
- 1001. வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
- செத்தான் செயக்கிடந்தது இல்.
- 1002. பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
- மருளானாம் மாணாப் பிறப்பு.
- 1003. ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
- தோற்றம் நிலக்குப் பொறை.
- 1004. எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
- நச்சப் படாஅ தவன்.
- 1005. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
- கோடியுண் டாயினும் இல்.
- 1006. ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
- ஈதல் இயல்பிலா தான்.
- 1007. அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
- பெற்றாள் தமியள்மூத் தற்று.
- 1008. நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
- நச்சு மரம்பழுத் தற்று.
- 1009. அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
- ஒண்பொருள் கொள்வார் பிறர்.
- 1010. சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
- வறங்கூர்ந் தனையது உடைத்து.