புணர்ச்சி மகிழ்தல்
Appearance
திருக்குறள் > களவியல்
- 1101. கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
- ஒண்தொடி கண்ணே உள.
- 1102. பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
- தன்நோய்க்குத் தானே மருந்து.
- 1103. தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
- தாமரைக் கண்ணான் உலகு.
- 1104. நீங்கின் தெறுஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
- தீயாண்டுப் பெற்றாள் இவள்?
- 1105. வேட்ட பொழுதின் அவையவை போலுமே
- தோட்டார் கதுப்பினாள் தோள்.
- 1106. உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
- அமிழ்தின் இயன்றன தோள்.
- 1107. தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
- அம்மா அரிவை முயக்கு.
- 1108. வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
- போழப் படாஅ முயக்கு.
- 1109. ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
- கூடியார் பெற்ற பயன்.
- 1110. அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
- செறிதோறும் சேயிழை மாட்டு.