தூது
Appearance
திருக்குறள் > அமைச்சியல்
- 681. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
- பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
- 682. அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
- இன்றி யமையாத மூன்று.
- 683. நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
- வென்றி வினையுரைப்பான் பண்பு.
- 684. அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
- செறிவுடையான் செல்க வினைக்கு.
- 685. தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
- நன்றி பயப்பதாந் தூது.
- 686. கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
- தக்கது அறிவதாம் தூது.
- 687. கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
- எண்ணி உரைப்பான் தலை.
- 688. தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
- வாய்மை வழியுரைப்பான் பண்பு.
- 689. விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
- வாய்சேரா வன்க ணவன்.
- 690. இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
- உறுதி பயப்பதாம் தூது.