கொடுங்கோன்மை
Appearance
திருக்குறள் > அரசியல்
- 551. கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
- அல்லவை செய்தொழுகும் வேந்து.
- 552. வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
- கோலொடு நின்றான் இரவு.
- 553. நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
- நாடொறும் நாடு கெடும்.
- 554. கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
- சூழாது செய்யும் அரசு.
- 555. அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
- செல்வத்தைத் தேய்க்கும் படை.
- 556. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
- மன்னாவாம் மன்னர்க் கொளி.
- 557. துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
- அளியின்மை வாழும் உயிர்க்கு.
- 558. இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
- மன்னவன் கோற்கீழ்ப் படின்.
- 559. முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
- ஒல்லாது வானம் பெயல்.
- 560. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
- காவலன் காவான் எனின்.