அரண்
Appearance
திருக்குறள் > அரணியல்
- 741. ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
- போற்று பவர்க்கும் பொருள்.
- 742. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
- காடும் உடைய தரண்.
- 743. உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
- அமைவரண் என்றுரைக்கும் நூல்.
- 744. சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
- ஊக்கம் அழிப்ப தரண்.
- 745. கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
- நிலைக்கெளிதாம் நீரது அரண்.
- 746. எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
- நல்லாள் உடையது அரண்.
- 747. முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
- பற்றற் கரியது அரண்.
- 748. முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
- பற்றியார் வெல்வது அரண்.
- 749. முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
- வீறெய்தி மாண்ட தரண்.
- 750. எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
- இல்லார்கண் இல்லது அரண்.