செடிகள் கொடிகள் மரங்கள்/செடிகள்/தூதுவளை
Appearance
இது மிகக் குறைந்த உயரம் வளரும்.சிறிது உயரம் வளர்ந்த பின் கொடியைப் போல சாய்ந்துவிடும்.வீடுகளில் தொட்டியில் வைத்து வளர்க்கலாம். நீல் நிறத்தில் பூக்கும்.பழங்கள் சிறியதாகவும் சிவப்பு நிறத்திலும் உருண்டையாகவும் இருக்கும்.இதன் இலைகளிலும் தண்டுப் பகுதியிலும் வளைந்த முட்கள் இருக்கும்.கத்தரிக்கோல் கொண்டு இதன் இலைகளைப் பறிக்க வேண்டும்.இலைகளை நெய்யில் வதக்கினால் முட்கள் வலுவிழந்து போய் விடும்.இதன் இலைகளை முசு முசுக்கை இலைகளுடன் சேர்த்தோ அல்லது தனியாகவோ துவையல் அரைத்து சாப்பிடலாம்.சளி,இருமல் போன்றவற்றுக்கு இது சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.