தெரிந்து வினையாடல்
Appearance
திருக்குறள் > அரசியல்
- 511. நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
- தன்மையான் ஆளப் படும்.
- 512. வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
- ஆராய்வான் செய்க வினை.
- 513. அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
- நன்குடையான் கட்டே தெளிவு.
- 514. எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
- வேறாகும் மாந்தர் பலர்.
- 515. அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
- சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.
- 516. செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
- எய்த உணர்ந்து செயல்.
- 517. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
- அதனை அவன்கண் விடல்.
- 518. வினைக் குரிமை நாடிய பின்றை அவனை
- அதற்குரிய னாகச் செயல்.
- 519. வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
- நினைப்பானை நீங்கும் திரு.
- 520 நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான்
- கோடாமை கோடா துலகு.