எப்படிச் செய்வது/மறுசுழற்சி செய்வது எப்படி?
குறைத்தல் (Reduce), மீள்பயன்படுத்தல் (Reuse), மறுசுழற்சி (recycle) என்ற கழிவு மேலாண்மை வியூகத்தில் மறுசுழற்சி ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. மறுசுழற்சி செய்வது பல்வேறு சூழலியல், பொருளியல், அரசியல், கல்வி நலன்களைக் கொண்ட ஒரு செயற்பாடு ஆகும். இன்று பல நாடுகளில் ஒரு சட்டப் பொறுப்பாகவும் உள்ளது.
மறுசுழற்சி என்பது நாம் பயன்படுத்திய பொருட்களை மீண்டும் பயன்படுத்த தக்கவாறு மீள் உருவாக்கம் செய்தல் ஆகும். இதனால் இப்பொருட்கள் கழிவிற்குச் செல்வது தடுக்கப்படுகிறது. இது சூழல் மாசடைடைவதைத் தவிர்க்க உதவுகிறது. இதே பொருட்களை புதிதாக ஆக்கத் தேவைப்படும் மூல வளங்களும் ஆற்றலும் பேணப்படுகின்றன.
மறுசுழற்சி செய்யப்படக் கூடிய பொருட்களின் விலை ஒப்பீட்டளவில் குறைவாக அமையும். இதனால் குடும்பப் பொருளாதாரம் தொடக்கம் நாட்டுப் பொருளாதாரம் வரை பொருளியல் நன்மைகள் உள்ளன. மறுசுழற்சி செய்வது தொடர்பான பொதுமக்கள் அறிவு, முறைமைகள், துறைசார் அறிவுகள், உள்கட்டமைப்பு ஒரு சமூகத்தின் பேண்தகு நிலையைக் கூட்டுகிறது.
மறுசுழற்சி பல நிலைகளில் மேற்கொள்ளப்படுகிறது. யப்பான் போன்ற நாடுகள் மிகவும் உச்சகட்டமான மறுசுழற்சியைச் செய்வதற்கான உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளன. இம் மாதிரியான உள்கட்டமைப்பும் முறைமைகளும் பல நாடுகளில் விரிவுபெற்று வருகின்றன. பெரும் தொழிற்சாலைகளில் இருந்து வீடு வரை பல்வேறு பொருட்களை மறுசுழற்சி செய்யலாம். பின்வரும் செய்முறை வீடுகளில் மறுசுழற்சி செய்வதற்கானது ஆகும்.
செய்முறை
[தொகு]அறிந்து கொள்ளல்
[தொகு]முதலாவதாக எவை எவை மறுசுழற்சி செய்யப்படலாம், எவ்வாறு செய்யப்படலாம் என்று அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் வாழும் ஊரைப் பொறுத்து எவற்றை, எவ்வாறு செய்யலாம் என்பது மாறுபடும். மறுசுழற்சி செய்யக் கூடிய பொருட்களில் பின்வருவன அடங்கலாம்.
- உயிரிக் கழிவுகள்: உணவுக் கழிவுகள், இலைகள், செடிகள் போன்றவை. உங்களுக்கு வசதி இருந்தால் இவற்றை நீங்களே மக்கிய உரமாக ஆக்கித் தோட்டத்தில் பயன்படுத்தலாம்.
- காகிதப் பொருட்கள்: பத்திரிகை, இதழ்கள், கடிதங்கள் போன்றவை
- கண்ணாடிப் போத்தல்கள்
- உலோகத் தகரங்கள், பேணிகள், அலுமினியத் தட்டுக்கள்
வகைப்படுத்தல்
[தொகு]பயன்படுத்தி முடித்த உடனேயே மறுசுழற்சிப் பொருட்களை பிறம்பாக, மறுசுழற்சி முறைக்கேற்ப வகைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். மறுசுழற்சி செய்யமுடியாத கழிவுகளை பிறம்பாக வைத்துக் கொள்ளுங்கள். பல நகரங்களில் குறைந்தது மூறு வகையாகப் பிரித்துக் கையாழுகிறார்கள். உயிரிப் பொருட்கள், மறுசுழற்சிப் பொருட்கள், கழிவுகள் என்று. இவ்வாறு வகைப்படுத்திய பொருட்களை முறையாக எடுத்துச் செலுமாறு வையுங்கள், அல்லது எடுத்துச் சென்று குடுங்கள்.
விற்பனை செய்தல்
[தொகு]பல நாடுகளில் மறுசுழற்சி செய்யப் படக் கூடிய பொருட்களை விற்க முடியும். வீடு வீடாக வந்தும் வாங்குவார்கள். இவ்வாறு வகைப்படுத்தி சேமித்து வைத்தவற்றை விற்றும் சற்று வருவாயும் பெற்றுக் கொள்ளலாம். போத்தல்கள் போன்றவற்றை சில கடைகளுக்கு எடுத்துச் சென்று விற்கலாம்.
சிறப்பு மறுசுழற்சி
[தொகு]இலத்திரனியல் பொருட்கள், மின்கலங்கள், ,மருந்துகள், பூச்சுக்கள் (paints) போன்றவை சிறப்பான முறையில் மறுசுழற்சி செய்யவேண்டும். எனவே அதற்கான வழிகளை அறிந்து செய்யுங்கள். எ.கா இலத்திரனியல் கருவிகளை மறுசுழற்சி செய்வதற்கான வணிக நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் உண்டு. பல சந்தர்ப்பங்களில் குளிரூட்டி போன்ற பெரிய பொருட்களை வீட்டுக்கு வந்து எடுத்துச் சென்று மறுசுழற்சி செய்வர்.
மறுசுழற்சிப் பொருட்களை வாங்குதல்
[தொகு]போத்தில், காகிதம், உடுப்பு, தளபாடங்கள், கட்டிடப்பொருட்கள் என்று பல வகையான மறுசுழற்சிப் பொருட்கள் விற்கப்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் விலை குறைவானவை, ஆனால் பயன்பாட்டில் ஈடானவை. அவற்றை கண்டறிந்து வாங்குங்கள்.
இணைந்து செயற்படுதல்
[தொகு]மறுசுழற்சி என்பது நாம் எல்லோரும் இணைந்து மேற்கொள்ளும் ஒரு செயற்பாடு ஆகும். எவற்றை, எவ்வாறு மறுசுழற்சி செய்யலாம் என்பதை பற்றிய அறிவைப் பெருக்கி பகிர்ந்து கொள்ளுங்கள். வணிகங்கள், அரசுகள் மேலும் மேலும் மறுசுழற்சி செயற்பாடுகளில் ஈடுபடுவதை உக்குவியுங்கள்.
குறைத்தல், மீள்பயன்படுத்தல்
[தொகு]மறுசுழற்சியை விட சிறந்த முறை பொருட் பயன்பாட்டைக் குறைத்தல், அல்லது பயன்படுத்திய பொருட்களை மீள் பயன்படுத்தல் ஆகும்.
எப்படிச் செய்வது/மறுசுழற்சி செய்வது எப்படி?
http://ta.wikibooks.org/s/ei
< எப்படிச் செய்வது
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
குறைத்தல் (Reduce), மீள்பயன்படுத்தல் (Reuse), மறுசுழற்சி (recycle) என்ற கழிவு மேலாண்மை வியூகத்தில் மறுசுழற்சி ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. மறுசுழற்சி செய்வது பல்வேறு சூழலியல், பொருளியல், அரசியல், கல்வி நலன்களைக் கொண்ட ஒரு செயற்பாடு ஆகும். இன்று பல நாடுகளில் ஒரு சட்டப் பொறுப்பாகவும் உள்ளது.
மறுசுழற்சி என்பது நாம் பயன்படுத்திய பொருட்களை மீண்டும் பயன்படுத்த தக்கவாறு மீள் உருவாக்கம் செய்தல் ஆகும். இதனால் இப்பொருட்கள் கழிவிற்குச் செல்வது தடுக்கப்படுகிறது. இது சூழல் மாசடைடைவதைத் தவிர்க்க உதவுகிறது. இதே பொருட்களை புதிதாக ஆக்கத் தேவைப்படும் மூல வளங்களும் ஆற்றலும் பேணப்படுகின்றன.
மறுசுழற்சி செய்யப்படக் கூடிய பொருட்களின் விலை ஒப்பீட்டளவில் குறைவாக அமையும். இதனால் குடும்பப் பொருளாதாரம் தொடக்கம் நாட்டுப் பொருளாதாரம் வரை பொருளியல் நன்மைகள் உள்ளன. மறுசுழற்சி செய்வது தொடர்பான பொதுமக்கள் அறிவு, முறைமைகள், துறைசார் அறிவுகள், உள்கட்டமைப்பு ஒரு சமூகத்தின் பேண்தகு நிலையைக் கூட்டுகிறது.
மறுசுழற்சி பல நிலைகளில் மேற்கொள்ளப்படுகிறது. யப்பான் போன்ற நாடுகள் மிகவும் உச்சகட்டமான மறுசுழற்சியைச் செய்வதற்கான உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளன. இம் மாதிரியான உள்கட்டமைப்பும் முறைமைகளும் பல நாடுகளில் விரிவுபெற்று வருகின்றன. பெரும் தொழிற்சாலைகளில் இருந்து வீடு வரை பல்வேறு பொருட்களை மறுசுழற்சி செய்யலாம். பின்வரும் செய்முறை வீடுகளில் மறுசுழற்சி செய்வதற்கானது ஆகும். பொருளடக்கம்
1 செய்முறை 1.1 அறிந்து கொள்ளல் 1.2 வகைப்படுத்தல் 1.3 விற்பனை செய்தல் 1.4 சிறப்பு மறுசுழற்சி 1.5 மறுசுழற்சிப் பொருட்களை வாங்குதல் 1.6 இணைந்து செயற்படுதல் 1.7 குறைத்தல், மீள்பயன்படுத்தல் 2 வெளி இணைப்புகள்
செய்முறை அறிந்து கொள்ளல்
முதலாவதாக எவை எவை மறுசுழற்சி செய்யப்படலாம், எவ்வாறு செய்யப்படலாம் என்று அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் வாழும் ஊரைப் பொறுத்து எவற்றை, எவ்வாறு செய்யலாம் என்பது மாறுபடும். மறுசுழற்சி செய்யக் கூடிய பொருட்களில் பின்வருவன அடங்கலாம்.
உயிரிக் கழிவுகள்: உணவுக் கழிவுகள், இலைகள், செடிகள் போன்றவை. உங்களுக்கு வசதி இருந்தால் இவற்றை நீங்களே மக்கிய உரமாக ஆக்கித் தோட்டத்தில் பயன்படுத்தலாம். காகிதப் பொருட்கள்: பத்திரிகை, இதழ்கள், கடிதங்கள் போன்றவை கண்ணாடிப் போத்தல்கள் உலோகத் தகரங்கள், பேணிகள், அலுமினியத் தட்டுக்கள்
வகைப்படுத்தல்
பயன்படுத்தி முடித்த உடனேயே மறுசுழற்சிப் பொருட்களை பிறம்பாக, மறுசுழற்சி முறைக்கேற்ப வகைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். மறுசுழற்சி செய்யமுடியாத கழிவுகளை பிறம்பாக வைத்துக் கொள்ளுங்கள். பல நகரங்களில் குறைந்தது மூறு வகையாகப் பிரித்துக் கையாழுகிறார்கள். உயிரிப் பொருட்கள், மறுசுழற்சிப் பொருட்கள், கழிவுகள் என்று. இவ்வாறு வகைப்படுத்திய பொருட்களை முறையாக எடுத்துச் செலுமாறு வையுங்கள், அல்லது எடுத்துச் சென்று குடுங்கள். விற்பனை செய்தல்
பல நாடுகளில் மறுசுழற்சி செய்யப் படக் கூடிய பொருட்களை விற்க முடியும். வீடு வீடாக வந்தும் வாங்குவார்கள். இவ்வாறு வகைப்படுத்தி சேமித்து வைத்தவற்றை விற்றும் சற்று வருவாயும் பெற்றுக் கொள்ளலாம். போத்தல்கள் போன்றவற்றை சில கடைகளுக்கு எடுத்துச் சென்று விற்கலாம். சிறப்பு மறுசுழற்சி
இலத்திரனியல் பொருட்கள், மின்கலங்கள், ,மருந்துகள், பூச்சுக்கள் (paints) போன்றவை சிறப்பான முறையில் மறுசுழற்சி செய்யவேண்டும். எனவே அதற்கான வழிகளை அறிந்து செய்யுங்கள். எ.கா இலத்திரனியல் கருவிகளை மறுசுழற்சி செய்வதற்கான வணிக நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் உண்டு. பல சந்தர்ப்பங்களில் குளிரூட்டி போன்ற பெரிய பொருட்களை வீட்டுக்கு வந்து எடுத்துச் சென்று மறுசுழற்சி செய்வர். மறுசுழற்சிப் பொருட்களை வாங்குதல்
போத்தில், காகிதம், உடுப்பு, தளபாடங்கள், கட்டிடப்பொருட்கள் என்று பல வகையான மறுசுழற்சிப் பொருட்கள் விற்கப்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் விலை குறைவானவை, ஆனால் பயன்பாட்டில் ஈடானவை. அவற்றை கண்டறிந்து வாங்குங்கள். இணைந்து செயற்படுதல்
மறுசுழற்சி என்பது நாம் எல்லோரும் இணைந்து மேற்கொள்ளும் ஒரு செயற்பாடு ஆகும். எவற்றை, எவ்வாறு மறுசுழற்சி செய்யலாம் என்பதை பற்றிய அறிவைப் பெருக்கி பகிர்ந்து கொள்ளுங்கள். வணிகங்கள், அரசுகள் மேலும் மேலும் மறுசுழற்சி செயற்பாடுகளில் ஈடுபடுவதை உக்குவியுங்கள். குறைத்தல், மீள்பயன்படுத்தல்
மறுசுழற்சியை விட சிறந்த முறை பொருட் பயன்பாட்டைக் குறைத்தல், அல்லது பயன்படுத்திய பொருட்களை மீள் பயன்படுத்தல் ஆகும்.== வெளி இணைப்புகள் ==
- மறுசுழற்சி - (தமிழில்)
- மறுசுழற்சி - (ஆங்கிலத்தில்)