விக்கிநூல்கள்:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர்

விக்கிநூல்கள் இலிருந்து

வரலாற்றில் இன்று



அக்டோபர் 1: விடுதலை நாள்: சைப்பிரஸ்; நைஜீரியா (இரண்டும் 1960); துவாலு (1978); பலாவு (1994).

  • 1799 - புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டான்.
  • 1854 - இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது.
  • 1949 - மா சே துங் (படம்) மக்கள் சீனக் குடியரசை அறிவித்தார்.
  • 1953 - ஆந்திரா மாநிலம் உருவாக்கப்பட்டது.

  • படிமம்:காமராஜர்.jpg

    அக்டோபர் 2: விடுதலை நாள்: கினி (1958), காந்தி ஜெயந்தி, அனைத்துலக வன்முறையற்ற நாள்

  • 1904 - இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாத்திரி பிறப்பு.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனிப் படைகள் மாஸ்கோவுக்கு எதிரான தமது மூன்று மாதத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
  • 1968 - மெக்சிகோவில் இடம்பெற்ற மாணவர்களின் அமைதிப் போராட்டத்தின் முடிவில் நூற்றக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
  • 1975 - இந்திய அரசியல் தலைவர், தமிழ்நாட்டு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் (படம்) இறப்பு.

  • அக்டோபர் 3: ஜெர்மனி - இணைப்பு நாள் (1990)

  • 1908 - பிராவ்டா (படம்) செய்திப்பத்திரிகையின் முதல் இதழ் லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் அவரது சகாக்களினால் வியென்னாவில் வெளியிடப்பட்டது.
  • 1981 - வட அயர்லாந்தில் "மேஸ்" சிறைச்சாலையில் ஐரிஷ் குடியரசு இராணுவக் கைதிகளின் ஏழு மாத உண்ணாநோன்பு முடிவுக்கு வந்தது. 10 பேர் இறந்தனர்.
  • 1990 - ஜெர்மன் சனநாயகக் குடியரசு மேற்கு ஜெர்மனியுடன் இணைந்தது.

  • விக்கிநூல்கள்:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 4


    விக்கிநூல்கள்:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 5


    விக்கிநூல்கள்:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 6


    விக்கிநூல்கள்:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 7


    விக்கிநூல்கள்:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 8


    விக்கிநூல்கள்:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 9


    1. கனடாவில் நன்றி தெரிவித்தல் தினம்
    2. பிஜியில் தேசிய தினம்
    3. ஜப்பானில் ஆரோக்கியம் மற்றும் விளையாட்டு தினம்.
    4. ஐக்கிய அமெரிக்காவில் கொலம்பசு தினம்

    விக்கிநூல்கள்:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 11


    • 1968 19 வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு மெக்ஸிக்கோ நகரில் திறக்கப்பட்டன.
    • 1999 ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்'பின் ஆட்சியை அந்நாட்டு இராணுவம் கவிழ்த்தது.

    அக்டோபர் 13:

  • 54 - ரோமப் பேரரசன் குளோடியஸ் (படம்) அவனது நான்காவது மனைவியினால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டதினால் அவளது மகன் நீரோ ரோமப் பேரரசனானான்.
  • 1943 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலியின் புதிய அரசு நட்பு நாடுகளின் பக்கம் சாய்ந்ததைத் தொடர்ந்து அச்சு அணி நாடுகள் மீது போரை அறிவித்தது.
  • 1972 - உருகுவாய் விமானம் ஒன்று ஆர்ஜெண்டீனாவுக்கும் சிலிக்கும் இடையில் அண்டீஸ் மலைகளில் மோதியது. அதில் பயணம் செய்த 45 பேர்களில் 16 பேர் மட்டும் 10 நாட்களின் பின்னர் மீட்கப்பட்டனர்.
  • அண்மைய நாட்கள்: அக்டோபர் 12அக்டோபர் 11அக்டோபர் 10


    அக்டோபர் 14: உலகத் தர நிர்ணய நாள்

  • 1948 - இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் கூடியது.
  • 1956 - இந்தியத் தலித் தலைவர் அம்பேத்கர் (படம்) தனது 385,000 ஆதரவாளர்களுடன் பௌத்தத்திற்கு மதம் மாறினார்.
  • 1964 - லியோனிட் பிரெஷ்னெவ் சோவியத் ஒன்றியத்தின் அதிபராகவும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் நாயகமும் ஆனார். நிக்கிட்டா குருசேவ் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
  • 1968 - விண்ணிலிருந்தான முதலாவது நேரடி தொலைக்காட்சி அஞ்சல் அப்போலோ 7 விண்கலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டது.
  • அண்மைய நாட்கள்: அக்டோபர் 13அக்டோபர் 12அக்டோபர் 11


    அக்டோபர் 15:

  • 1582 - இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகள் யூலியின் நாட்காட்டியில் இருந்து கிரெகொரியின் நாட்காட்டிக்கு மாறிய முதலாவது உலக நாடுகளாகின.
  • 1917 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனிக்காக உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட டச்சு நடன மாது மாட்ட ஹரி பாரிசில் மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டாள்.
  • 1931 - இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் (படம்)பிறப்பு.
  • 1966 - ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமைகளை வென்றெடுக்கவென கருஞ்சிறுத்தைக் கட்சி என்ற பெயரில் மார்க்சிய இயக்கம் ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

  • அக்டோபர் 16: உலக உணவு நாள்

  • 1799 - பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டான்.
  • 1951 - பாகிஸ்தானின் முதலாவது பிரதமர் லியாகத் அலி கான் (படம்) ராவல்பிண்டியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
  • 2003 - தமிழ் விக்கிப்பீடியாவில் முதலாவது கட்டுரை சிரின் எபாடி பற்றி எழுதப்பட்டது.
  • 2006 - 1987 இல் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை அடுத்து இணைக்கப்பட்டிருந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு செல்லாது என இலங்கை உயர் நீதிமன்றம் அறிவித்தது.

    அக்டோபர் 17: உலக வறுமை ஒழிப்பு நாள்

  • 1979 - அன்னை தெரேசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
  • 1981 - புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான கண்ணதாசன் இறப்பு.
  • 1995 - யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றும் நோக்கில் இலங்கை இராணுவம் ரிவிரெச நடவடிக்கையை ஆரம்பித்தது.

    அக்டோபர் 18: ஐக்கிய அமெரிக்கா - அலாஸ்கா நாள்

  • 1867 - ரஷ்யாவிடம் இருந்து அலாஸ்கா மாநிலத்தை ஐக்கிய அமெரிக்கா 7.2 மில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கியது.
  • 1922 - பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
  • 1954 - முதலாவது டிரான்சிஸ்டர் வானொலி (படம்) அறிமுகப்படுத்தப்பட்டது.

    அக்டோபர் 19: நியுயே: அரசியலமைப்பு நாள் (1974)

  • 1812 - பிரான்சின் நெப்போலியன் பொனபார்ட் மாஸ்கோவில் இருந்து பின்வாங்கினான்.
  • 1976 - சிம்பன்சி (படம்) உலகின் அருகி வரும் மிருக இனமாக அறிவிக்கப்பட்டது.
  • 2000 - பிபிசியின் யாழ்ப்பாண நிருபர் நிமலராஜன் துணை இராணுவக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார்.
  • 2001 - 400 அகதிகளை ஏற்றிச் சென்ற இந்தோனீசியப் படகு கிறிஸ்துமஸ் தீவில் கவிழ்ந்ததில் 353 பேர் கொல்லப்பட்டனர்.

    அக்டோபர் 20:

    1469 - சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக் தேவ் (படம்) பிறப்பு.
  • 1973 – சிட்னி ஒப்பேரா மாளிகையை இரண்டாம் எலிசபெத் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். 1982 - மாஸ்கோவில் இடம்பெற்ற பன்னாட்டு உதைப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 66 பேர் இறந்தனர். 2004 - உபுண்டு லினக்ஸ் வெளியிடப்பட்டது.


    • 1879 - தாமஸ் ஆல்வா எடிசன் தனது முதலாவது தொழில் ரீதியான மின்குமிழைப் பரிசோதித்தார். இது 13 மணி நேரம் எரிந்தது.
    • 1944 - கிறகுஜேவாச் படுகொலைகள் நாசி ஜெர்மனியப் படைகள் 7000 சேர்பியரைப் படுகொலை செய்தனர்.
    • 1987 - ஈழப்போர்: யாழ்ப்பாணம் மருத்துவமனையில் இந்திய இராணுவத்தினர் சுட்டதில் மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.