நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/பெருமாள் திருமொழி/5ம் திருமொழி
Appearance
--வெ.ராமன் 09:12, 4 ஜூலை 2006 (UTC)
வித்துவக்கோட்டம்மான் தரவு கொச்சகக் கலிப்பா தருதுயரம் தடாயேல்உன் சரணல்லால் சரணில்லை* விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே!* அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும்* மற்றவள்தன் அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே. 1 கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும்* கொண்டானை யல்லால் அறியாக் குலமகள்போல்* விண்டோய் மதிள்புடைசூழ் விற்றுவக்கோட் டம்மா!*நீ கொண்டாளா யாகிலுமுன் குரைகழலே கூறுவனே. 2 மீன்நோக்கும் நீள்வயல்சூழ் விற்றுவக்கோட் டம்மா!*என் பால்நோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்* தான்நோக்கா தெத்துயரம் செய்திடினும்* தார்வேந்தன் கோல்நோக்கி வாழும் குடிபோன்றி ருந்தேனே. 3 வாளா லறுத்துச் சுடினும் மருத்துவன்பால்* மாளாத காதல்நோ யாளன்போல்* மாயத்தால் மீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மா!*நீ ஆளா வுனதருளே பார்ப்பன் அடியேனே. 4 வெங்கண்திண் களிறடர்த்தாய்! விற்றுவக்கோட் டம்மானே!* எங்குப்போய் உய்கேன்உன் னிணையடியே அடையலல்லால்* எங்கும்போய்க் கரைகாணா தெறிகடல்வாய் மீண்டேயும்* வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே. 5 செந்தழலே வந்தழலைச் செய்திடினும்* செங்கமலம் அந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லால் அலராவால்* வெந்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட் டம்மா!*உன் அந்தமில்சீர்க் கல்லால் அகங்குழைய மாட்டேனே 6 எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்* மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவைப்போல்* மெய்த்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட் டம்மா!*என் சித்தம்மிக வுன்போலே வைப்பன் அடியேனே. 7 தொக்கிலங்கி யாறெல்லாம் பரந்தோடி* தொடுகடலே புக்கன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்றவைபோல்* மிக்கிலங்கு முகில்நிறத்தாய் விற்றுவக்கோட் டம்மா!*உன் புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன்காண் புண்ணியனே! 8 நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான் தன்னையே* தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்* மின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட் டம்மா!* நின்னையே தான்வேண்டி நிற்பன் அடியேனே. 9 விற்றுவக்கோட் டம்மா!நீ வேண்டாயே யாயிடினும்* மற்றாரும் பற்றில்லே னென்றுஅவனைத் தாள்நயந்த* கொற்றவேல் தானைக் குலசே கரன்சொன்ன* நற்றமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே. 10 குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்