உள்ளடக்கத்துக்குச் செல்

சி ஷார்ப்/உலகதரமாக்கல்

விக்கிநூல்கள் இலிருந்து

கணினி முதன் முதலில் ஆங்கிலத்தில் உள்ள எழுத்துக்களை வைத்து நிரலாக்கம் செய்யப்பட்டாலும், தற்காலத்தில் அனைத்து விதமான மக்களையும் சென்று சேரும் வகையில் மென்பொருள்கள் அனைத்தும் உலகத்தரமாக்கம் (Globalization) செய்யப்பட வேண்டி உள்ளது. உதாரணமாக ஒரு நிறுவனம் தான் செய்யும் மென்பொருளானது (Software) உலகின் இரண்டு வேறுபட்ட இடங்களில் வாழும் மக்களைச் சென்று அடைக்கிறது எனக் கொள்வோம். இந்தியா மற்றும் ஐரோப்பா வாழ் மக்களைச் சென்று சேர்க்கிறது எனக் கொள்வோம்.

கலாச்சார அடிப்படையில் வேறுபாடுகள்

[தொகு]

மக்களின் கலாசார அடிப்படையில் ஒரே விஷயத்தை வெவ்வேறான கோணங்களில் குறிப்பிடு செய்கின்றனர். ஒரு தேதியை எடுத்துக் கொண்டால், ஜூலை-25-2001; என்பதை இந்த இரண்டு பகுதி வாழ் மக்கள் இவ்வாறு குறிப்பிடு செய்கிறார்கள். ஐரோப்பா அல்லது அமெரிக்காவைச் சார்ந்த மக்கள் முதலில் மாதத்தையும் இரண்டாவது மாதத்தின் தேதியையும், மூன்றாவதாக வருடத்தையும் குறிக்கிறனர். ஆனால் இந்தியாவை சேர்ந்த மக்கள் முதலில் தேதியையும் இரண்டாவது மாதத்தையும் மூன்றாவது வருடத்தையும் குறிக்கின்றனர். இவ்வகையான வேறுபாடுகள் நிறைந்த மக்களை நமது மென்பொருள் சென்று அடையும் போது அங்கு நிலவும் கலாசார (Culture) சூழலையும் மனதில் கொள்ள வேண்டும். அதற்க்கு ஏற்றபடி மென்பொருளின் பயனர் இடைமுகம் இதற்காக சி ஷார்ப் மொழியில் இருக்கும் ஒரு நுட்பமே உலகதரமாக்கல் (Globalization) என்கிறோம்.

கலாச்சார அடிப்படையில் வேறுபாடுகள் ஜூலை-25-2001
ஐரோப்பா அல்லது அமெரிக்கா 07-25-2011
இந்தியா 25-07-2011

உள்ளூர்மயப்படுத்துதல் (Localization)

[தொகு]

உள்ளூர் மயப்படுத்துதலில் மொழியாக்கம், மாற்றும் கலாச்சார குறியாக்கம் போன்றவை கொண்டு வரப்படவேண்டும்.

ஒரு குறிப்பிட்ட கலாசாரத்தை உருவாக்குதல்

[தொகு]

ஒரு குறிப்பிட்ட கலாசாரத்தை பின்வரும் இரண்டு விதமான பண்புகளின் மூலம் தொகுக்கலாம். அவைகள் Thread என்னும் class'யை சேர்ந்தவை முறையே

  • Thread.CurrentThread.CurrentCulture: இவைகள் கலாசாரம் சார்ந்த methods'களை நிர்ணயம் செய்கிறது.
  • Thread.CurrentThread.CurrentUICulture: இவைகள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் Resource Manager'ஆல் load செய்யப் பட்டு உள்ள பயனர் இடைமுகத்தின் (User Interface) காலாசார பண்புகளை நிர்ணயம் செய்கிறது.

மேற்கண்ட காலாசார மாறுதல்களை செய்யும் போது கலசாரதகவல்கள் (CultureInfo)

Setting CultureInfo படிமம்:Culture At Dot net

CultureInfo

Operations:

CultureInfo(cultureName: string): Thread.CurrentThread.CurrentCulture


Thread.CurrentThread

Derived from: CultureInfo

Attributes:

CurrentCulture

//C#
// Change the current culture
Thread.CurrentThread.CurrentCulture = new CultureInfo("es-ES");
Thread.CurrentThread.CurrentUICulture = new CultureInfo("es-ES");
MessageBox.Show(Thread.CurrentThread.CurrentCulture.ToString());
double d = 1234567.89;
// Show the figure as currency using the current culture
MessageBox.Show(d.ToString("C"));
// Show the current time using the current culture MessageBox.Show(DateTime.Now.ToString()); இதனுடைய வெளியீடு பின்வருமாறு இருக்கும்,

es-ES
1.234.567,89 €
17/08/2008 11:07:46

"https://ta.wikibooks.org/w/index.php?title=சி_ஷார்ப்/உலகதரமாக்கல்&oldid=6722" இலிருந்து மீள்விக்கப்பட்டது