உள்ளடக்கத்துக்குச் செல்

ஓஷோவின் பேருரைகள்/மௌனத்தின் மொழி

விக்கிநூல்கள் இலிருந்து

நமது தற்கால வாழ்வும், நேரமற்ற பணக்காரர்களும்

[தொகு]

நமது வாழ்க்கை மும்புரமாகி விட்டது. இது உண்மையா? அல்லது நமது உள் தயாரிப்பா? ஒரு வேளை பின்வருமாறு கொடுக்கப்படப் போகும் மாதிரிகள் உங்களின் வாழ்வோடுஒத்துப் போகலாம். காலையில் எழுந்த உடனேயே நீங்கள் சோர்வாக உணர்கிறீர்கள்,உங்களின் மூளை சில கணம் இன்று என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று அவ்வப்போதுசொல்லிக் கொண்டே இருக்கிறது. எது எப்படி இருப்பினும் ஆரம்பம் முதலே சோர்வாக, வெறுப்பாக உணர்கிறீர்கள். உங்களின் உடலினுள், உங்களின் வாழ்வை செலுத்துவதற்காக,உங்களின் தலை சமையல் அறையை நோக்கித் திரும்புகிறது.

உங்களை வேலையிலோ அல்லது பள்ளியிலோ மும்புரமாகி விடுகிறீர்கள், மேலும் அந்த நாள் முழுவதுமே செயல்களில் ஈடுபடுத்தி விடுகிறீர்கள். இங்கும் அங்கும் சிலவற்றை செய்வதற்காகவே எப்போதும் அவசரமாக இருந்து விடுகிறீர்கள். மிக விரைவாகவே முன்பகல்வாக்கில் இன்னும் நீங்கள் உணவு அருந்தவே இல்லை என்பதை உணர்கிறீர்கள். நீங்கள் மிக விரைவான மதிய உணவு உண்டதால், உங்களது வயிறு வருத்தமடைந்து காணப்படுகிறது, திடிரென சில ஆற்றல்களை குடித்துக் கொண்டு மீண்டும் உங்களின் பரபரப்பான வேளையில் ஆழ்ந்து விடுகிறீர்கள்.

அன்றைய நாளின் பின்னர் வெறுப்படைந்து, களைத்துப் போய், மீண்டும் வீடு திரும்புகிறீர்கள். உங்களின் குழந்தைகளின் முன்பு கொட்டாவி விட்டுக் கொண்டு இருக்கிறீர்கள், அவர்களின் வழி அனுப்பிவிட்டு, மீண்டும் அடுத்த நாளுக்காக தயாராக படுக்கையறையை நோக்கி நடக்கிறீர்கள், இப்படியே சென்று கொண்டு இருக்கும் போது வெள்ளிகிழமை வந்து விடுகிறது.

இது தெளிவற்றது என்பதை தற்போதுதான் உணர்கிறேன், ஆனால் பல மனிதர்கள் இதையே வாழ்க்கையாக செய்து கொண்டு இருக்கிறார்கள், அதனை வெறுத்து விடுங்கள். ஆனாலும் இந்தவகையான வாழ்க்கையை ஏன் உடுத்திக் கொண்டு திரிகிறோம்? ஏனெனில் இதுவே அனைவரின் வாழ்வாகவும் இருந்து வழியாகி விடுகிறது. நீங்கள் பிறப்பின் முதலே மும்புரமாக இருப்பதே நல்லது என்று கற்றுக் கொடுக்கப்பட்டு உள்ளீர்கள்.எப்படி இருக்கினும் மேற்கண்ட வாழ்க்கை முழுவதும் அதன் வழியில் நகர்ந்து கொண்டே செல்கிறது.

உண்மையில் மரணம் என்பது வந்து கொண்டே இருக்கிறது, அது நம்மில் ஒவ்வொருவருக்குமே வரத்தான் போகிறது, பணக்காரர்கள், ஏழைகள், சிறியோர்கள், பெரியோர்கள். இது ஒரு பிறப்பை போன்றே இறப்பும் ஒரு பகுதி. ஆனால் இருப்பு ஒரு முடிவு அல்ல, எப்படி இருப்பினும் உங்களின் மரணப் படுக்கையில் உங்களது நேரத்தை அலுவலகத்திலா செலவழிப்பீர்கள்.

மேற்குலகம் மிகவும் நேரமின்மையில் இருப்பதற்கு என்னதான் காரணம் இருக்கிறது? காரணம் என்னவென்றால் சமுகம் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது, மனதில் இருந்து ஒவ்வொரு சமுதாயமும் தனி மனிதனும் இதைக் கற்றுக் கொள்கிறான். மனதினால் அமைதியாய் இருக்க முடிவதில்லை!மனம் அமைதியாய் இருந்தால் அது இல்லாமலே போய்விடுமே! _மனதினால் கடந்த மற்றும் எதிர் காலத்தில் மட்டுமே வாழ முடியும்._ இவை இரண்டையும் தவிர வேறு எந்த ஒரு இடத்திலும் மனதினால் வாழ முடிவதில்லை. பல நூற்றாண்டுகளில், ஒரு பணியாளனாய் இருந்த போதிலும், தேர்ச்சி பெற்ற எஜமானனாய் ஆகி விட்டது, நீ மனதிற்கு எஜமானனாய் ஆகும் நேரம் நெருங்கி விட்டது.

_மௌனம் என்பது இந்த கணத்தில் வாழ்வதன் இசை ஆகும்._ கடந்த மற்றும் எதிர் காலத்தினால் இரைச்சல்களே இருக்கின்றன. நிகழ்காலம் என்பது அமைதி ஆகும். இந்த மௌனத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கிறது. நமது வாழ்க்கையிலும் அல்லது பிறரின் வாழ்க்கையிலும் குறைந்தது ஒரு முறையேனும் இதை நாம் உணர்ந்து இருக்கலாம், ஆனால் அந்த உணர்தல் என்பது ஒரு நாள்-இரவு-திருடனைப் போல மறைந்து விடுகிறது. *எப்படி மௌனத்தை கற்றுக் கொள்வது?* நாம் தியானிப்பவர்களாக மாற வேண்டும், தியானத்தை ஒரு செயலாக அல்லாமல் நமது வாழ்வில் பயணிக்கும் வழியாக கொள்ள வேண்டும். தற்போது நீங்கள் ஒவ்வொருவரும் சொல்லிக் கொண்டு இருப்பதை என்னால் கேட்க முடிகிறது.எனக்கு உட்காந்து தியானிக்க நேரமில்லையே! இது ஒரு குழம்பிய எண்ணம் ஆகும். உங்களின் பிரச்சனைகளைத் தீர்க்க நீங்கள் பிரச்சனைக்-கொண்டு-இருக்காதா-நேரம் தேவை.

சில மணிநேரங்கள் அமர்ந்துதான் தியானிக்க வேண்டும் என்பது தேவை இல்லை. /ஒரு சாட்சியாய் இருப்பதற்கும் தியானிக்கவும் / ஒவ்வொரு கலையிலும் 15-10 நிமிடங்களே போதுமானது. நீங்கள் அமர்ந்து இருக்கும் போதோ அல்லது படுத்துக் கொண்டு இருக்கும் போதோ உங்களின் மூளையைச் சுற்றிக் கொண்டு இருக்கும் எண்ணங்களை கவனியுங்கள். அவற்றில் எந்த ஒரு எண்ணத்திற்கும் அங்கிகாரம் கொடுக்க முயலாதீர்கள். அந்த எண்ணங்கள் உங்களில் பயணிக்க அனுமதி கொடுங்கள் ஆனால் அதன் பின் செல்வதற்கு ஆயத்தம் ஆகாமல் இருங்கள். நீங்கள் உங்களின் எண்ணங்களை பார்க்கும் ஒரு பார்வையாளராக மட்டுமே இருங்கள்.சில வாரங்கள் கழித்து இந்தப் பயிற்சியானது உங்களின் ஒவ்வொருநாள் வாழ்விலும் பங்கெடுத்துக் கொள்ளும். உங்களின் மனம் சொல்லும் பிரச்சனைகளுக்கும், சம்பந்தம் இல்லாத உரையாடல்களுக்கும் நீங்கள் எந்த ஒரு கவனமும் செல்த்தாமல் இருப்பதினால், மனது களைத்துப் போய் விடும். எந்த ஒரு விமர்சனமும் எந்த ஒரு கருத்துக்களோ கொடுக்காமல் அப்படியே கவனியுங்கள். கடலில் விற்கப் படும் ஒரு கப்பல் போன்று அவற்றை கவனித்துக் கொண்டு இருங்கள். மழை பின்னர் மழைத்தூறல் போன்று உங்களின் மனம் மேலும் அதிக சிரத்தை எடுத்து உங்களை தனது கட்டுப் பாட்டினுள் கொண்டு செல்ல முயலும். ஆனால் அந்த கணம் தனது அதிகாரத்தை உங்களிடம் இருந்து எடுக்க முடியாமல் விடும் போது மனது அமைதியாகி விடும், உங்களின் வாழ்க்கையான அப்போது மிக லேசாக அற்புதமான ஒன்றாய் ஆகி விடும்.

இதனை தினமும் செய்யும் போது நீங்கள் மிகவும் உயரிய படைப்பாளி ஆகி விடுவீர்கள், மிகக் குறித்த நேரத்திலே அதிகப் படையானவற்றை செய்திடும் ஒரு படைப்பாளி ஆகி விடுவீர்கள். நீங்கள் வெறுத்த வேளை என்பது அப்போது அர்த்தமுள்ளதாய் ஆகி விடும். நீங்கள் தியானத்தில் உள்ளே செல்ல செல்ல மிக அதிக ஆனந்தத்தை அடைவீர்கள்.சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளைப் போன்றே, பிற நாட்களையும் கொண்டாட ஆரம்பித்து விடுவீர்கள்.உங்களால் மௌனத்தில் அமைதியையும் ஆனந்தத்தையும் கண்டு கொள்ள முடியும்.