எமிலி, அல்லது கல்வி பற்றி/நூல்-2

விக்கிநூல்கள் இலிருந்து

[203] இது வாழ்வின் இரண்டாம் நிலை குறிப்பு-1, சரியாகச் சொன்னால் அந்த மழலைப்பருவம் முடிவடைந்தது. மழலை (infans), குழந்தை (puer) ஆகிய சொற்கள் ஒரே பொருளுடையவை அல்ல. பின்னுள்ள சொல் முன்னுள்ளதை உள்ளடக்கியது; முன்னுள்ளதன் பொருள் "பேசயியலாதது"; வலேரியசு (என்பார்) "puerum infantem" என்கிறார் (நம்பிக்கையற்றதாய் மழலையுடையதாய் பேசுகிறான்). ஆனால் நம் மொழியின் வழக்கபடி வேறு சொல் கிடைக்கும் வரை நான் குழந்தை [பிரான்சிய மொழிச்சொல் enfant] என்ற சொல்லையே தொடர்கிறேன்.

[204] குழந்தைகள் பேசத் தொடங்கியவுடன் அழுகைக் குறைகிறது. இந்த வளர்ச்சி இயற்கையானது; ஒரு மொழி மற்றொரு மொழிக்கு மாற்றாக அமைகின்றது. அவர்களால் தங்களுக்கு ஏதாவது ஒன்று வலி ஏற்படுத்தினால், அதனைச் சொற்களால் சொல்ல முடியும்பொழுது, ஏன் அவர்கள் அழ வேண்டும், சொற்களால் சொல்ல முடியாத அளவுக்கு வலி இருந்தாலொழிய? அவர்கள் இனியும் அழுதால், அவர்களைச் சுற்றியுள்ளவர்களைத்தாம் குற்றம் சொல்ல வேண்டும். ஒருமுறை "இது வலிக்கின்றது" என எமிலி கூறியபின், மிகக்கூரிய வலி மட்டுமே அவனை அழ வைக்கும்.

[205] குழந்தை இக்கட்டாகவும், உணர்ச்சி மிகுந்ததாகவும் இருந்தால், அவனுடைய அழுகைகளை பயனற்றதாகவும், தாக்கமற்றதாகவும் செய்து, இயற்கையால் ஒன்றுமில்லாததுக்கெல்லாம் அவன் அழத் தொடங்கினால், நான் விரைவில் அவன் கண்ணீர்களை அதன் ஆதாரத்திலிருந்து அடக்குவேன். அவன் அழுகும் வரையில் நான் அவன் அருகில் செல்லமாட்டேன்; அவன் அமைதியான பொழுது நான் செல்வேன். விரைவில் அவன் என்னை அழைக்கும் முறையை அமைதியாக்கிவிடுவான், அல்லது ஒரு சின்ன அழுகையையாவது விட்டுவிடுவான். அறிகுறிகளின் உணர்ச்சி மிகுந்த விளைவினால், குழந்தைகள் தங்களின் பொருளை கற்றுக்கொள்கிறார்கள்; அவர்களுக்கு வேறு ஒரு மரபு இங்கு இல்லை. ஆயினும் குழந்தைகள் தங்களை மிகுதியாக காயப்படுத்திக்கொள்கிறது, கேட்கப்படுவதாய் அவன் நம்பும் வரையில், தனியாக அவன் இருக்கும் பொழுது, அவன் அரிதாகவே அழுகிறான்.

[206] அவன் விழுந்து அல்லது மோதி அவன் தலைப் புடைத்தாலோ, அல்லது அவன் மூக்கில் கசிந்தாலோ அல்லது அவன் விரல்களை அறுத்துக் கொண்டாலோ, அடிமணிபோல் அவனை அவசரப்படுத்துவதற்கு பதிலாக, நான் குறைந்தது முதலிலாவது, அமைதியாக இருந்து கொள்வேன். ஆபத்து நிகழ்ந்துவிட்டது;