ஃபெய்ன்மன் விரிவுரைகள்/முன்னுரை

விக்கிநூல்கள் இலிருந்து

முன்னுரை[தொகு]

இவையெல்லம் என்ன?:அறிவியலும் அதன் பிதற்றொலியும்(The Meaning of It All) என்பது திரு ரிச்சர்ட் ஃபெய்ன்மன் 1963 ல் வழங்கிய மூன்று விரிவுரைகளின் ஒரு தொகுப்பு. அவ் விரிவுரைப் பேச்சு பழமையானதாக இருந்தாலும் அதன் கருத்துக்கள் காலத்தால் என்றும் அழியாதவை. அறிவியல் பிதற்றொலியை சராசரி மக்களுக்கு தெளிவாக்குவதே இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று.

அறிவியலின் நிச்சயமின்மை(The Uncertainity of Science) என்ற தலைப்பிலான அவரது முதல் விரிவுரை, "அறிவியல்" என்பது "மறுக்கக்கூடாத கொள்கைகள்" என்று எதுவும் இல்லாத ஒரு அழகான துறை என்பதை விளக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஃபெய்ன்மன் "நிச்சயமின்மை" என்ற கொள்கை எப்படி பொதுவாக நம் வாழ்க்கைக்கும் அதன் முன்னேற்றதிற்க்கும் உதவுகிறது என்பதை பற்றி விவாதிக்கிறார். ஒத்தநிலை கான்தலையும், மரபு சார்பையும் ஊக்குவிக்கும் ஒரு சூழல், எப்படி புதிய சிந்தனைகள் அரும்புவதை தடுத்துவிடுகிறது என்று இதில் விளக்குகிறார். அழகான புதிய சிந்தனைகளின் பிறப்பிடமே அறிவியல் சுதந்திரம் தான் என்கிறார்.

தார்மீகக் கலாச்சரத்தின் நிச்சயமின்மை(The Uncertainty of Values)என்ற தலைப்பிலான அவரது இரண்டாம் விரிவுரை தார்மீக சிந்தனையின் மதம் சார்ந்த வரலாற்றை பற்றியும் பாரம்பரிய மதங்களில் இருக்கும் வீண் கட்டுக்கதைகளில் இருந்து உன்னதமான தார்மீக சிந்தனைகளை மீட்டெடுக்கும் ஒரு திறனை அறிவியல் இக்கால மக்களுக்கு எப்படி வழங்கி இருக்கிறது என்பது பற்றியும் பேசுகிறார். அறிவியல் எந்த ஒரு தார்மீக ஒழுங்குமுறையயும் புகுத்துவது இல்லை ஆனால் தார்மீக ரீதியில் ஒரு இக்கட்டான நிலைமையில் நாம் ஒரு சரியான முடிவை தேர்ந்தெடுக்க அது உதவுகிறது என்று இவ்விரிவுரரையில் அவர் கருதுகிறார்.

மூன்றாவதாக அறிவியல் சிந்தனையற்ற நம் காலம்(This Unscientific Age), எனும் விரிவுரையில் முனைவர்.கார்ல் சேகன் மற்றும் திரு மைக்கல் செர்மர் போன்ற சிந்தனையாளர்கள் எதிர்கொண்ட சமூகச் சிக்கல்களான போலி அறிவியல் நடைமுறைகள் மற்றும் சிந்தனைகளை பற்றி விமர்சிக்கிறார். கடைசி விரிவுரை என்பதால் ஒழுங்கமைக்கப்பட்ட வாக்கியங்களை அவர் பயன்படுத்தவில்லை என்றாலும்,சரளமான மொழியில் அமைந்திருக்கும் இந்தக்கடைசி விரிவுரை படிப்பவர்களை, காலத்தில் பின்னோக்கி கொண்டு சென்று ஏதோ அவர்கள் நேரடியாக அந்த விரிவுரை அறையில் அமர்ந்து இருந்தது போன்ற ஒரு உணர்வை தருகிறது.