உள்ளடக்கத்துக்குச் செல்

அன்றாடத் தமிழ்ப் பேச்சு (இலங்கை)

விக்கிநூல்கள் இலிருந்து

உறவுகள்

[தொகு]
  • கணவர்
  • மனைவி
  • அம்மா
  • அப்பா
  • அக்கா
  • அண்ணா
  • தங்கை
  • தம்பி
  • அம்மம்மா
  • அம்மப்பா
  • அப்பம்மா
  • அப்பப்பா
  • பெரியப்பா
  • பெரியம்மா
  • சித்தப்பா
  • சின்னம்மா
  • மைத்துணன்
  • மைத்துணி
  • நண்பன்
  • நண்பி

உணவுகள்

[தொகு]
  • சோறு
  • கறி
  • புட்டு
  • இடியப்பம்
  • தோசை
  • இட்லி
  • கொத்து ரொட்டி
  • சம்பல்
  • சட்னி
  • சொதி
  • குழம்பு
  • வறை
  • பொரியல்
  • வதக்கல்
  • பால்கறி
  • ரசம்
  • கூழ்
  • தேனீர்
  • காப்பி
  • தண்ணீர்
  • குடிபானம்

எண்கள்

[தொகு]
  • 1 - ஒன்று
  • 2 - இரண்டு
  • 3 - மூன்று
  • 4 - நான்கு
  • 5 - ஐந்து
  • 6 - ஆறு
  • 7 - ஏழு
  • 8 - எட்டு
  • 9 - ஒன்பது
  • 10 - பத்து
  • 11 - பதின் ஒன்று
  • 12 - பதின் இரண்டு

...

  • 20 - இருபது
  • 21 - இருபத்தி ஒன்று
  • 22 - இருபத்தி இரண்டு

...

  • 30 - முப்பது
  • 31 - முப்பத்தி ஒன்று

நிறங்கள்

[தொகு]
  • கறுப்பு
  • வெள்ளை
  • பச்சை
  • நீலம்
  • சிகப்பு
  • இளஞ்சிகப்பு
  • மஞ்சள்
  • செம்மஞ்சள்
  • நாவல்
  • ஊதா
  • சாம்பல்
  • மண்நிறம்

உடல் உறுப்புகள்

[தொகு]
  • தலை
  • மயிர்
  • கண்
  • இமை
  • காது
  • சொக்கு
  • மூக்கு
  • வாய்
  • பல்
  • நாக்கு
  • கழுத்து
  • தோள்
  • கை
  • முழங்கை
  • மணிக்கட்டு
  • விரல்
  • நகம்
  • இடை
  • வயிறு
  • தொப்பிள்
  • குண்டி; பிட்டம்
  • கால்
  • முழங்கால்
  • தொடை

இடங்கள்

[தொகு]
  • வீடு
  • பள்ளிக் கூடம்
  • மருத்துவமனை
  • கடை
  • நூலகம்
  • சனசமூக நிலையம்
  • அலுவலகம்
  • தொழிற்சாலை
  • கோயில்/தேவாலயம்/பள்ளிவாசல்
  • பூங்கா
  • கடற்கரை
  • காடு

உடைகள்

[தொகு]
  • சட்டை/மேற்சட்டை
  • காற்சட்டை
  • அரைக் காற்சட்டை
  • சுடிதார்
  • பாவாடை
  • உள் உடை
  • வேட்டி
  • சேலை
  • தொப்பி
  • கையுறை
  • காலுறை

கிழமைகள்

[தொகு]
  • ஞாயிற்றுக் கிழமை
  • திங்கட் கிழமை
  • செவ்வாய்க் கிழமை
  • புதன் கிழமை
  • வியாழக் கிழமை
  • வெள்ளிக் கிழமை
  • சனிக் கிழமை

ஆங்கில மாதங்கள்

[தொகு]
  • சனவரி
  • பெப்ரவரி
  • மார்ச்
  • ஏப்பிரல்
  • சூன்
  • சூலை
  • ஆகத்து
  • செப்டம்பர்
  • அக்டோபர்
  • நவம்பர்
  • டிசம்பர்

தமிழ் மாதங்கள்

[தொகு]
  • தை
  • மாசி
  • பங்குனி
  • சித்திரை
  • வைகாசி
  • ஆனி
  • ஆடி
  • ஆவணி
  • புரட்டாதி
  • ஐப்பசி
  • கார்த்திகை
  • மார்கழி

பழங்கள்

[தொகு]
  • வாழைப்பழம்
  • மாம்பழம்
  • கொய்யாப்பழம்
  • நெல்லி
  • பனம்பழம்
  • அன்னாசி
  • பலாப்பழம்
  • விளாம்பழம்
  • நாவற்பழம்
  • இலந்தைப்பழம்
  • பப்பாளி
  • அப்பிள்
  • தோடம்பழம்
  • திராட்சை
  • பேரீச்சம்பழம்
  • புளியம்பழம்
  • இலுப்பைப்பழம்
  • பேரிக்காய்
  • வில்வம்பழம்

விலங்குகள்

[தொகு]
  • பசு/மாடு
  • ஆடு
  • முயல்
  • நாய்
  • பூனை
  • புலி
  • வேங்கை
  • சிங்கம்
  • யானை
  • ஒட்டகம்
  • கழுதை
  • குதிரை
  • வரிக்குதிரை
  • ஒட்டகச்சிவிங்கி

பறவைகள்

[தொகு]
  • காகம்
  • கிளி
  • பருந்து
  • கோழி
  • வாத்து
  • தீக்கோழி
  • மயில்
  • குயில்
  • புறா
  • ஆந்தை
  • வெளவால்

தொழில்கள்

[தொகு]
  • தொழிலாளர்
  • ஆசிரியர்
  • ஆய்வாளர்
  • வணிகர்
  • விற்பனையாளர்
  • கணக்காளர்
  • மேலாளர்
  • காவல்காரர்
  • படைவீரர்
  • தபால்காரர்
  • கடைக்காரர்
  • மருத்துவர்
  • செவ்லி
  • சமையல்காரர்
  • தீயணைப்பவர்
  • வழக்கறிஞர்
  • விவசாயி
  • தச்சர்
  • பொறியியலாளர்
  • நிரலாளர்
  • ஓவியர்
  • கலைஞர்
  • எழுத்தாளர்
  • நடிகர்


வடிவங்கள்

[தொகு]
  • வட்டம்
  • சதுரம்
  • நீள்சதுரம்
  • முக்கோணம்

திண்ம வடிவங்கள்

[தொகு]
  • கூம்பு
  • கனசதுரம்
  • கோளம்
  • உருளை

பருவங்கள்

[தொகு]
  • இலைதளிர்
  • கோடை
  • இலையுதிர்
  • மழைக் காலம்/மாரி/குளிர்

சந்தித்தல், அறிமுகப்படுத்தல்

[தொகு]
  • வணக்கம்
  • வணக்கம், இது என் நண்பன் வேலன்.
  • எப்படி இருக்கிறீங்க?

காலை எழும்புதல்

[தொகு]
  • என்ன இன்னும் எழும்பேல்லையா, எல்லோரையும் எழுப்பிவிடுங்கோ, பள்ளிக் கூடத்துக்கு நேரம் போகுது
  • எல்லோரும் பல்லுத் தீட்டிட்டீங்களோ?
  • வடிவா கொப்பளிச்சு, முகம் கழுவுங்கோ

  • பற்பொடி/பற்பசை எங்க?
  • பல்துலக்கியோடதான் இருக்கு.

கடைக்குப் போதல்

[தொகு]
  • என்ன சாமான் வாங்க வேண்டும்?
  • பட்டியல் போட்டாச்சா?
  • இந்தப் பொருளின் விலை என்ன?
  • மொத்தமா எவ்வளவு காசு?
  • கொஞ்சம் குறைச்சுப் போடுங்கோ?

  • இதுக்கு வரி இல்லை, இதுக்கு மேல குறைக்கேலாது.
  • மிச்சம் இந்தாங்கோ.
  • பை வேணுமா?

கால நிலை

[தொகு]
  • இண்டைக்கு கடும் வெக்கையா இருக்கும், 32 பாகையாம்.
  • நிறையத் தண்ணி குடிக்க வேணும், இல்லாட்டி வெக்கையத் தாங்க ஏலாது

  • முகில் மூட்டமா இருக்கு, மழை வரப் போகுது
  • மழை வருகுது, வெளியில இருக்கிற உடுப்பை எல்லாம் எடுங்கோ

  • இடமுழக்கம் பெலத்தாய் இருக்கு, அங்க பாருங்கோ மின்னல் அடுக்குது

  • பனி கொட்டிக் கிடக்குது, யாராவது போய் தள்ளி விடுங்கோ

நேரம்

[தொகு]
  • எத்தனை மணிக்கு இண்டைக்கு கூட்டம்
  • எட்டரைக்கு.
  • ஏன் இவ்வளவு தாமதம் ஆகுது?
  • எப்பவும் இப்படித்தான் முற்பகல் நேரத்தைக் குறிச்சுட்டு பிற்பகல்தான் கூட்டத்தை வைப்பாங்கள்

தானுந்துப் பயணம்

[தொகு]
  • காருக்கு எரிபொருள் போட்டனியே?
  • முப்புள்ளித் திருப்பம் செய்யத் தெரியுமா?

  • எந்த முகவரியியில இருக்கிறீங்க?
  • இடதா, வலதா
  • கவனம், சமிக்கை சிகப்பா வருகுது
  • நெடுஞ்சாலையை எடுங்கோ
  • வெளியை விடப் போறீங்க, இந்த வெளியை எடுங்கோ
  • காவல் நிக்குது, கவனமாப் போங்கோ
  • தடுப்பப் பிடியும், அவன் வேகமாக வெட்டுறான்
  • இங்க தரியுங்கோ

தொலைபேசி உரையாடல்

[தொகு]
  • வணக்கம்:
  • கண்ணன் இருக்கிறாரா?
  • கொஞ்சம் பொறுங்கோ, குடுக்குறன்.
  • வணக்கம்:
  • வணக்கம் கண்ணன், நான் குமரன் கதைக்கிறன், எப்படி இருக்கிறீங்க.
  • நான் நல்லா இருக்கிறன் குமரன், எங்க இருந்து பேசுறீங்க
  • நான் இப்ப பாரிசில இருக்கிறன்

கூட்டம்/சந்திப்பு

[தொகு]
  • சனிக்கிழமை கூட்டம் இருக்கும், எல்லோரும் வரவேண்டும்?
  • என்னத்தைப் பற்றி?
  • இன்னும் நிகழ்ச்சிநிரல் முடிவாகவில்லை, எங்க வேலைத் திட்டத் மீளாய்வு செய்யவைத் பற்றித்தான்

உபசரிப்பு

[தொகு]
  • வாங்கோ மோகன்
  • இருங்கோ, வீட்டை இலகுவாக கண்டுபிடிச்சிட்டீங்களோ
  • ஓம், பிரச்சினையில்லை
  • தேத்தண்ணி குடுக்கிறீங்களா?
  • வேணாம்.
  • அப்ப, குளிரா எதாவது?
  • இப்ப வேண்டாம். ஆறுதலாகக் குடிப்பம். மக்கள் எங்க?

உணவு உண்ணல்

[தொகு]
  • எல்லோரும் சாப்பிடலாம் வாங்கோ
  • இண்டைக்கு என்ன விசேசம்.
  • அப்பம் இருக்கு. பால் அப்பம் வேணுமா, முட்டை அப்பம் வேணுமா?
  • புட்டும் இருக்கு, போட்டுச் சாப்புடுங்கோ.
  • அவரவர் போட்டுச் சாப்பிடலாம்.
  • ம், இது நல்லாயிருக்கு. யார் சமைச்சது.

கணினி

[தொகு]
  • கணினி எங்க?
  • அந்த மேசையில இருக்குது.
  • அதிண்ட ஆற்றலைக் காணயில்லை..
  • இஞ்ச கிடக்குது.
  • இணையம் வேலை செய்யேல்ல, அடிச்சுக் கதைக்கணோம்.

மருத்துவரிடம் போதல்

[தொகு]
  • அம்மாவுக்கு சுகமில்லை. அவோவ மருத்துவரிடம் கூட்டிக்கிட்டுப் போகணும்.
  • அவோ கடுமையா இருமிறா. சாதுவா காச்சலும் இருக்கு.
  • மருத்துவரிட்ட கூட்டிக்கிட்டுப்போய் தடுப்பூசியும் போட்டுவிடு.
  • மருத்துவருக்கு முன்பதிவு செய்ய வேணுமா.
  • இல்லா நேராப் போணாலே பாப்பபினம்.

தொலைக்காட்சி பார்த்தல்

[தொகு]
  • தொலைக்காட்சியை ஒருக்காப் போட்டு விடு
  • செய்தி அலைவரிசையில போட்டுவிடு
  • எத்தினை மணிக்கு இண்டைக்கு விவாத நிகழ்ச்சி?

உணர்வுகள்

[தொகு]
  • இப்ப என்ன நடத்துட்டு எண்டு இவ்வளவு கவலையா இருக்கிரா.

  • கொஞ்சம் கோபத்தைக் குறையுங்கோ. துள்ளிக் குதிச்சு என்னத்தை சாதிக்கப் போறீங்க.

  • இண்டைக்கு நான் நிம்மதியா இருக்கிறன். எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது.