அரிச்சுவடி
தோற்றம்
கன்னட எழுத்துகள் பிராமியில் இருந்து தோன்றியவை. தெலுங்கு எழுத்துகள் கன்னட எழுத்துக்களைப் போன்றே தோற்றமளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கன்னட எழுத்து வரிசை தமிழைப் போன்றே இருக்கும். கூடுதலாக சில எழுத்துக்களையும் கொண்டுள்ளது. உயிரெழுத்துகள் ஸ்வர என்று அழைக்கப்படுகின்றன.
| கன்னட எழுத்து | தமிழ் எழுத்து | |
|---|---|---|
| ಅ | அ | |
| ಆ | ஆ | |
| ಇ | இ | |
| ಈ | ஈ | |
| ಉ | உ | |
| ಊ | ஊ | |
| ಋ | ர (VOCALIC R) | |
| ೠ | ற (VOCALIC RR) | |
| ಎ | எ | |
| ಏ | ஏ | |
| ಐ | ஐ | |
| ಒ | ஒ | |
| ಓ | ஓ | |
| ಔ | ஔ |
அரை உயிர், அரை மெய் ஒலிகளாகக் கருதப்படுபவை யோகவாஹக என்று அழைக்கப்படுகின்றன. ಅಂ - அம் (வட்டமாக இருப்பது அனுஸ்வர) ಅಃ - அஹ (அரைப் புள்ளியாக இருப்பது விசர்க) இவை பிற எழுத்துக்களுடனும் சேர்கின்றன. அம், அஹ என்பதைப் போலவே ஆம், இம், ஆஹ, இஹ என்று சேர்கின்றன.