ஆய்வேடுகள்/முன்னுரை

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

இப்பகுதியில் இதுநாள் வரை வெளிவந்துள்ள பல்கலைக்கழக முனைவர்பட்ட ஆய்வேடுகள் இளமுனைவர் பட்டம் ஆய்வேடுகள் பற்றிய விவரங்களும் அவ்வாய்வேடடின் சுருக்கமும் வெளியிடப்படும். முடிந்தஅளவு,தெளிவாகவும் சுரு்க்கமாகவும் அமைதல் நன்று. முடிந்தால் ஆய்வுசெய்தவர்களே அதன் சுருக்கத்தை எழுதின் சிறப்பு. இல்லையென்றால், அதனை ஆழ்ந்து படித்தவர்கள் அதன் சுருக்கத்தை வெளியிட்டு உதவலாம். ஆய்வேட்டின் முடிவுகள் அப்படியே வெளியிடுதல் சிறப்பு.ஆய்வாளர்கருத்துக்கே முதன்மைதரல்வேண்டும். இப்பகுதி பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களுக்குப்பெரிதும் பயன்தருவதாக அமையும். எனவே, அதன் தரம் மிகமிக முக்கியம். தமிழ்தவிரப் பிறமொழிகளில் எழுதப்பட்ட ஆய்வேடுகளின் சுருக்கத்தைத் தமிழில் தரவேண்டும். பிற துறைகளில் வந்த ஆய்வுகளுக்கும் இது பொருந்தும்.

ஆய்வுத்துணை நூல்கள்:

இப்பகுதியில் ஆய்வுத்தலைப்பு தொடர்பான மூலநூல்கள், துணைநூல்கள், திறனாய்வுநூல்கள், பல்வேறு பதிப்புகள் முதலியவற்றின் தொகுப்பு தரப்படும். இப்பகுதி ஆய்வு செய்வோர்க்கு மிகவும் துணையாகும். எனவே, தலைப்புகளையும் அதுதொடர்பான துணைநூல்களையும் தரலாம். தரம் மிகமிக முக்கியம் என்பதைக்கவனத்தில் கொள்க.

"https://ta.wikibooks.org/w/index.php?title=ஆய்வேடுகள்/முன்னுரை&oldid=11755" இருந்து மீள்விக்கப்பட்டது