உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய ஒப்பந்த சட்டம் 1872

விக்கிநூல்கள் இலிருந்து

இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் நாள் , இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872 அமலுக்கு வந்தது.

 2019 முதல் இந்தியா முழுவதும் இது பொருந்தும். அனைத்துவிதமான  ஒப்பந்தங்கள் பற்றியும் இந்த சட்டம் கூறவில்லை. சில வகை ஒப்பந்தங்கள் வேறு சட்டங்களில் விவாதிக்கப்படுகின்றன.உதாரணமாக கூட்டு வியாபரம்(PARTNERSHIP ACT), சரக்கு விற்பனை (SALE OF GOODS ACT) ,மாற்று முறை ஆவணசட்டம்(NEGOTIABLE INSTUMENTS ACT), அசையா சொத்து மாற்றங்கள் (TRANSFER OF PROPERTY ACT) போன்றவை ஒவ்வொரு விதமான ஒப்பந்தங்கள் பற்றி கூறுகின்றன.

இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872, ஒப்பந்தங்களின் பொதுவான கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் பற்றி விளக்குகிறது.இந்த சட்டத்தை இரண்டு பகுதியாகப் பிரித்துக்கொள்ளலாம். பிரிவு 1 முதல் பிரிவு 75 வரை , ஒப்பந்தங்களின் பொதுவான அடிப்படை விதிகள் பற்றி பேசப்படுகிறது.பிரிவு 124 முதல் பிரிவு 238 வரை சிலவகை சிறப்பு ஒப்பந்தங்கள் (எ-டு: அடகு, முகவாண்மை (agency) ) பற்றி பேசப்படுகிறது.

இந்திய சட்ட வடிவங்களில் , எல்லா சட்டங்களிலும் பிரிவு -2 (SECTION-2) என்பது வரையறைகள் பிரிவாக இருக்கும். அதாவது அந்த சட்டத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து சொற்களுக்கும் இந்த பிரிவில் வரையறைகள் கொடுக்கப்பட்டிருக்கும். ஏன் இப்படி செய்யவேண்டும்? முக்கிய சொற்களை முன்பே வரையறுத்து விடுவதால் ஒரே சொல்லுக்கு வெவ்வேறு பொருள் சொல்லி யாரும் குழப்ப முடியாது.இதனால் சில சிக்கல்களை தவிர்க்க முடியும்,

உடன்படிக்கை (Agreement) மற்றும் ஒப்பந்தம் (Contract) :

பிரிவு 2(h) : இந்த பிரிவு ஒப்பந்தம் என்ற சொல்லை வரையறுக்கிறது. ஒப்பந்தம் என்றால் என்ன? பிரிவு 2(h) இன்படி " ஒப்பந்தம் என்பது, சட்டத்தினால் செயல்படுத்தக்கூடிய ஓர் உடன்படிக்கை ஆகும். ( Contract is an agreement enforceable by law) அப்படியென்றால் "உடன்படிக்கை - Agreement - என்பது என்ன?

பிரிவு 2(e) "உடன்படிக்கை " என்ற சொல்லை வரையறுக்கிறது.

எனவே அனைத்து உடன்படிக்கைகளும் "ஒப்பந்தம் " அல்ல. ஆனால் அனைத்து ஒப்பந்தங்களும் உடன்படிக்கைதான். (All Agreements are not contracts But all Contracts are agreements)

ஒப்பந்தம் என்று சொல்ல முடியாத உடன்படிக்கைகள் யாவை?

சமூக உடன்படிக்கைகளை இவ்வாறு கூறலாம்.உதாரணமாக நீங்கள் உங்கள் நண்பரை சாப்பிடுவதற்கு வீட்டுக்கு அழைக்கிறீர்கள். ஆனால் அன்றைய தினம் வேறு அவசர வேலையாக நீங்கள் வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியூர் போய்விட்டீர்கள்.உங்கள் நண்பர் வீட்டுக்கு வந்து ஏமாற்றம் அடைகிறார். இதற்காக அவர் உங்கள் மேல் வழக்கு தொடர முடியுமா? நிச்சயமாக முடியாது.ஏன் என்றால் நீங்கள் செய்துகொண்டது சமூக உடன்பாடே தவிர சட்டப்படி செயல்படுத்த்க்கூடிய ஒப்பந்தம் அல்ல.

கணவருக்கும் மனைவிக்கும் இடையிலான உடன்பாடும் இத்தகையதே. ஸ்ரீலங்காவில் வேலை பார்த்துவந்த ஒருவர், இங்கிலாந்தில் வாழும் தம் மனைவிக்கு மாதா மாதம் ஒரு தொகையைக் (வீட்டுச் செலவுக்காக) கொடுப்பதாக ஒப்புக்கொண்டார்.ஆனால் தம் மனைவி தமக்கு விசுவாசமாக இல்லை என்று அறிந்தபின் அவர் பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டார்.அவர் செய்தது சரி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. சட்டப்படி செல்லத்தக்க ஓர் ஒப்பந்தத்தில் இருக்கவேண்டிய முக்கிய அம்சங்கள் : இந்திய ஒப்பந்தங்கள் சட்டத்தின் பிரிவு 10 பின்வருமாறு கூறுகிறது: All agreements are contracts if they are made by the free consent (பரிபூரண -முழுமையான சம்மதம்) of the parties competent to contract , for a lawful Consideration and with a lawful Object and are not hereby expressly declared to be void"

1. Agreement : 2.Free Consent : ஒப்பந்தம் செய்துகொள்ளும் நபர்கள் , முழுமையான சம்மதத்தின் அடிப்படையில் ஒப்பந்தத்தை செய்துகொள்ள வேண்டும்.இந்த சம்மதமும் FREE ஆக இருக்க வேண்டும்.- அதாவது-வேறு யாராலும் வற்புறுத்திப் பெறப்பட்டதாகவோ பிறரால் அச்சுறுத்தப்பட்டு பெறப்பட்டதாகவோ இருக்கக்கூடாது. 3.Competency - ஒப்பந்தம் செய்துகொள்ள சில தகுதிகள் அவசியம்.உதாரணமாக 18 வயது நிறையாத மைனருடன் செய்துகொள்ளும் ஒப்பந்தம் செல்லாது.முட்டாள்கள், மனனிலை சரியற்றவர்கள் போன்றவர்களுடன் செய்துகொள்ளும் ஒபந்தங்களும் செல்லாது. 4.Lawful consideration : consideration என்பதை பிரதிபலன் என்று கூறலாம்.ஒப்பந்தத்தின்படி நாம் ஒருவருக்கு ஒரு வேலையை செய்துகொடுக்கிறோம் அல்லது செய்யாமல் இருக்கிறோம் என்றால் அதற்குக் கைம்மாறாக அவர் நமக்கு கொடுப்பதை consideration என்கிறோம்.இந்த கைம்மாறு சட்டப்படி செல்லக்கூடியதாக இருக்கவேண்டும்.உதாரணமாக நான் உங்களுக்கு பத்து மூட்டை அரிசி தருகிறேன் என்றால் நீங்கள் எனக்கு ஆயிரம் ரூபாய் தரமுன்வந்தால் அது நியாயம்.ஆனால் அதற்காக வேறு ஒரு நபரை அடித்து கை

"https://ta.wikibooks.org/w/index.php?title=இந்திய_ஒப்பந்த_சட்டம்_1872&oldid=17335" இலிருந்து மீள்விக்கப்பட்டது