இன்னா செய்யாமை
Appearance
திருக்குறள் > துறவறவியல்
- 311. சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
- செய்யாமை மாசற்றார் கோள்.
- 312. கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
- செய்யாமை மாசற்றார் கோள்.
- 313. செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
- உய்யா விழுமந் தரும்.
- 314. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
- நன்னயஞ் செய்து விடல்.
- 315. அறிவினான் அகுவ துண்டோ பிறிதின்நோய்
- தந்நோய்போல் போற்றாக் கடை.
- 316. இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
- வேண்டும் பிறன்கண் செயல்.
- 317. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
- மாணாசெய் யாமை தலை.
- 318. தன்னுயிர்க்கு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
- மன்னுயிர்க்கு இன்னா செயல்.
- 319. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
- பிற்பகல் தாமே வரும்.
- 320. நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
- நோயின்மை வேண்டு பவர்.