உள்ளடக்கத்துக்குச் செல்

இயற்பியல் கற்றல் வழிகாட்டி/அடிப்படை அலகுகள்

விக்கிநூல்கள் இலிருந்து

வார்ப்புரு:PSG

அளவீட்டுக்குான அனைத்துலக முறை

[தொகு]

அடிப்படை அலகுகள்

[தொகு]

நேரம்

[தொகு]

இரு குறித்த நிகழ்வுகளுக்கிடையிலான காலமானது நேரம் என வரையறுக்கப்படுகின்றது. அளவீட்டுக்கான அனைத்துலக முறையில் நேரத்தின் அடிப்படை அலகு, நொடி (செக்கன்) (s) ஆகும். சீசிய (Cs) அணுவானது 9,192,631,770 முழுமையான அலைவுகளை மேற்கொள்ள எடுக்கும் காலமானது ஒரு நொடி என வரையறுக்கப்பட்டுள்ளது. இப்பூவுலகானது தன் அச்சில் ஒரு முறை முழுமையாகச் சுற்றுவதற்கு எடுக்கும் நேரம் 86400 s ஆகும். இந்நேரமானது ஒரு நாள் என அழைக்கப்படுகின்றது. எனவே, ஒரு நாளின் 86400இல் 1 பகுதி, ஒரு நொடி ஆகும்.

நீளம்

[தொகு]

அளவீட்டுக்கான அனைத்துலக முறையில் நீளத்தின் அடிப்படை அலகு, மீற்றர் (மீட்டர்) (m) ஆகும். ஒளியானது வெற்றிடத்தில் 1/299,792,458 நொடியில் செல்லும் தூரமானது ஒரு மீற்றர் என வரையறுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து, வெற்றிடத்தில் ஒளியின் கதி (தமிழக வழக்கு: வேகம்) 299,792,458 m s−1 என அறியலாம்.

திணிவு (தமிழக வழக்கு: நிறை)

[தொகு]

அளவீட்டுக்கான அனைத்துலக முறையில் திணிவின் அடிப்படை அலகு, கிலோகிராம் (kg) ஆகும். பிரான்சு நாட்டிலுள்ள செவிரே (Sèvres) என்னும் இடத்திலுள்ள ஒரு பிளாற்றின-இரிடியக் (பிளாட்டின-இரிடியம்) கலப்புமாழை (கலப்புலோகம்) உருளையின் திணிவானது ஒரு கிலோகிராம் என வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு படியானது மேரிலாந்திலுள்ள கேய்த்தெர்சுபர்கில் (Gaithersburg) உள்ளது. பார்க்க: விக்கிப்பீடியாவில் கிலோகிராம்

ஓட்டம்

[தொகு]

அளவீட்டுக்கான அனைத்துலக முறையில் மின்னோட்டத்தின் அடிப்படை அலகு, அம்பியர் (ஆம்பியர்) (A) ஆகும். புறக்கணிக்கக்கூடிய வட்டக் குறுக்குவெட்டுப்பரப்பைக் கொண்ட இரண்டு நேரான முடிவிலி நீளக் கடத்திகள் 1 m இடைத்தூரத்தில் இணையாக (சமாந்தரம்) வைக்கப்படுமிடத்து, இக்கடத்திகளுக்கிடையில் ஒரு மீற்றர் நீளத்திற்கு 2×10-7 N விசையை ஏற்படுத்தவல்ல மின்னோட்டம், ஓர் அம்பியர் என வரையறுக்கப்பட்டுள்ளது.

வெப்பவியக்கவியல் வெப்பநிலை

[தொகு]

அளவீட்டுக்கான அனைத்துலக முறையில் வெப்பவியக்கவியல் வெப்பநிலையின் அடிப்படை அலகு, கெல்வின் (K) ஆகும். நீரின் மும்மைப் புள்ளியின் 1/273.16 மடங்கு, ஒரு கெல்வின் ஆகும்.

பொருளின் (பதார்த்தம்) அளவு

[தொகு]

அளவீட்டுக்கான அனைத்துலக முறையில் பொருளின் அளவின் அடிப்படை அலகு, மூல் (மோல்) (mol) ஆகும். 12C ஓரிடத்தானின் (சமதானி, ஐசோடோப்பு) 0.012 kg திணிவிலுள்ள அணுக்களின் எண்ணிக்கை ஒரு மூல் என வரையறுக்கப்பட்டுள்ளது.