உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் நீதிக் கதைகள்/அதிக தீனியிடப்பட்ட கோழி

விக்கிநூல்கள் இலிருந்து

ஒரு விதவையிடம் இருந்த ஒரு கோழி ஒவ்வொரு நாளும் ஒரு முட்டை இட்டது. அக்கோழி அதிகமான தானியங்களை உண்டால் அது இரண்டு முட்டைகளை இடும் என்று எண்ணிய அப்பெண் அக்கோழிக்கு அதிகமாக தீனியிட ஆரம்பித்தாள். அனைத்து தீனியையும் உண்டதன் காரணமாக கோழி கொழுத்தது. இறுதியாக முட்டையிடுவதையே முழுவதுமாக நிறுத்தி விட்டது.


நீதி: தங்களது தேவைக்கு அதிகமாக பெற நினைப்பவர்கள் தங்கள் கைகளில் வைத்துள்ள சிறிய அளவையும் இழந்து விடுகின்றனர்.