ஈசாப் நீதிக் கதைகள்/அல்சியோன் பறவை
அல்சியோன் என்பது தனிமையில் வாழ்வதை விரும்பிய மற்றும் பெரும்பாலும் கடலிலேயே வாழ்ந்த ஒரு பறவை ஆகும். தன்னை வேட்டையாட வரும் மனிதர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அது ஆற்றங்கரை அல்லது கடற்கரைகளில் இருந்த பாறைகளின் மீது கூடுகட்டும் எனக் கூறப்பட்டது.
தற்போது ஒருநாள் ஒரு அடை காக்கும் நிலையில் இருந்து அல்சியோன் பறவை கடலின் நடுவில் இருந்த ஒரு சிறு மேட்டு நிலப் பகுதிக்கு சென்றது. அங்கு கடலுக்கு மேல் துருத்திக் கொண்டிருந்த ஒரு பாறையைக் கண்டது. தன்னுடைய கூட்டை அங்கு அமைத்தது. ஆனால் சில காலத்திற்கு பிறகு அது இரை தேடச் சென்ற போது, திடீர் புயல் காற்று ஏற்பட்டது. பலத்த காற்று காரணமாக கடலானது கொந்தளித்தது. அலைகள் கூடு அமைந்திருந்த இடம் வரை எழுந்தன. கூடானது நீரால் நிரப்பப்பட்டது. அப்பறவையின் இளம் பறவைகள் மூழ்கின.
திரும்பி வந்த அல்சியோன் பறவை என்ன நடந்தது என்பதை கண்டது. அழுதவாறு "நான் எவ்வளவு துரதிர்ஷ்டசாலி! நிலத்தில் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருந்த வேட்டைக்கு பயந்து கடலால் அதை விட ஆபத்து அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ள ஒரு இடத்தில் தஞ்சம் அடைந்து விட்டேனே!" என்றது.
நீதி: சில மனிதர்கள் தங்களது எதிரிகளுக்கு பயந்து, நண்பர்களாக காட்டி கொள்வோரை நம்புகின்றனர். அவர்கள் உண்மையிலேயே அவர்களது எதிரிகளை விட மிகவும் ஆபத்தானவர்கள் ஆவர்.