உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் நீதிக் கதைகள்/இராப்பாடியும், வௌவாலும்

விக்கிநூல்கள் இலிருந்து

ஒரு சன்னலுக்கு அருகில் தொங்கவிடப்பட்டிருந்த ஒரு கூண்டில் ஒரு இராப்பாடி அடைக்கப்பட்டிருந்தது. அங்கு பறந்து சென்ற ஒரு வௌவால் இராப்பாடியிடம் அது ஏன் இரவில் மட்டும் பாடுகிறது, ஆனால் பகலில் அமைதியாக இருக்கிறது என்று கேட்டது. பகல் பொழுதில் ஒரு முறை பாடும் போது தான் பிடிக்கப்பட்டதாகவும், அது தனக்கு ஒரு பாடமாக இருந்ததாகவும், அதற்கு பிறகு இரவில் மட்டுமே தான் பாடுவேன் என்று சபதம் எடுத்ததாகவும் அது கூறியது. வௌவால் கூறியதாவது "ஆனால் அதற்கு இப்போது தேவை இல்லை. இவ்வாறு பாடுவது உனக்கு எந்த வித நன்மையும் விளைவிக்கப் போவதில்லை. நீ பிடிக்கப்படும் முன்னரே எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும்".


நீதி: அழிவு ஏற்பட்டதற்கு பிறகு வருந்தி பயன் இல்லை.