உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் நீதிக் கதைகள்/ஏமாற்றுபவன்

விக்கிநூல்கள் இலிருந்து

ஒரு மனிதன் உடல் நலம் குன்றினான். உடல் நிலை மோசமடைந்ததால் கடவுள்கள் அவனுக்கு உடல் நலத்தை வழங்கினால் 100 காளை மாடுகளை பலியிடுவேன் என்று உறுதியளித்தான். அவனது உறுதியை எவ்வாறு நிறைவேற்றுவான் என்பதை அறிய விரும்பிய கடவுள்கள் அவன் குறுகிய காலத்திலேயே உடல் நலக்குறைவில் இருந்து மீளச் செய்தனர். தற்போது அவனுக்கு இந்த உலகில் சொந்தமாக ஒரு காளை கூட கிடையாது. எனவே அவன் மாட்டு கொழுப்பிலிருந்து 100 சிறிய காளை மாடுகளை உருவாக்கினான். அவற்றை ஒரு பீடத்தின் மீது படையலாக கொடுத்தான். அப்போது அவன் "கடவுள்களே, நான் எனது உறுதியை நிறைவேற்றி விட்டேன் என்பதை தற்போது நீங்கள் காணலாம்" என்றான். கடவுள்கள் அவனுக்குப் பாடம் புகட்ட விரும்பினர். எனவே அவனுக்கு ஒரு கனவு ஏற்பாடுமாறு செய்தனர். அக்கனவில் அவன் ஒரு கடற்கரைக்கு சென்று அங்கே 100 மகுடங்களை காண்பதாக கனவு கண்டான். மிகுந்த உற்சாகமடைந்த அவன் கடற்கரைக்கு சென்றான். ஆனால் அங்கு இருந்ததோ கொள்ளையர்கள் ஆவர். கொள்ளையர்களிடம் அவன் மாட்டிக் கொண்டான். அவர்கள் அவனை பிடித்து அடிமையாக விற்பதற்காக தூக்கி சென்றனர். அவனை விற்ற போது அவனுக்கு விலையாக 100 மகுடங்களை அவர்கள் பெற்றனர்.


நீதி: உன்னாள் கொடுக்க இயலும் அளவுக்கு மேல் உறுதி அளிக்காதே.