ஈசாப் நீதிக் கதைகள்/கண் பார்வையற்றவன்
Appearance
ஒரு காலத்தில் ஒரு கண்பார்வையற்ற மனிதன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு சிறந்த தொடு உணர்வுத் திறன் இருந்தது. அவனுடைய கைகளில் எந்த ஒரு விலங்கை வைத்தாலும் அது என்ன விலங்கு என்று கூற அவனால் முடிந்தது. ஒரு நாள் அவன் கையில் ஓர் ஓநாயின் குட்டி ஒன்று வைக்கப்பட்டது. அது என்ன விலங்கு என்று அவனிடம் கேட்கப்பட்டது. அதை சிறிது நேரம் உணர்ந்து பார்த்த பிறகு அவன் கூறியதாவது "உண்மையில் இது ஓர் ஓநாயின் குட்டியா அல்லது ஒரு குள்ளநரியின் குட்டியா என்று எனக்கு தெரியவில்லை: ஆனால் எனக்கு தெரிவது யாதெனில் செம்மறியாடுகள் இருக்கும் இடத்தில் இதை நம்பி என்றுமே விட்டு விடாதீர்கள்" என்றான்.
நீதி: தீய மனப்பாங்கானது சிறு வயதிலேயே வெளிப்படுகிறது.