உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் நீதிக் கதைகள்/கன்றுக் குட்டியை இழந்த மேய்ப்பாளன்

விக்கிநூல்கள் இலிருந்து

ஓர் மேய்ப்பாளனின் கன்று குட்டிகளில் ஒன்று தொலைந்து விட்டது. அவன் கடவுளின் உதவியை வேண்டினான். தன்னுடைய கன்றுக் குட்டியை கண்டுபிடிப்பதில் வெற்றி கண்டால் கடவுளுக்கு ஒரு கன்றுக் குட்டியை தான் காணிக்கையாக செலுத்துவேன் என்று உறுதியளித்தான். அவன் அலைந்து திரிந்த போது தொலைந்து போன கன்றுக் குட்டியின் இறந்த உடலை துண்டு துண்டாக ஒரு சிங்கம் மென்று கொண்டிருப்பதை கண்டான். பிறகு அவன் கடவுளிடம் வேண்டியதாவது "கடவுளே, இந்த காட்டு விலங்கின் அச்சுறுத்தலில் இருந்து நான் தப்பித்தால் என்னுடைய உயிருக்கு காணிக்கையாக மற்றொரு கன்று குட்டியை நான் உனக்கு அளிப்பேன்" என்று வேண்டினான்.

நீதி: ஒவ்வொரு மனிதனும் எந்த அதிகப்படியான செல்வம் அல்லது வருவாயை விட தன்னுடைய சொந்த உயிரை மிகவும் விரும்புகிறான்.