உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் நீதிக் கதைகள்/குள்ளநரியும், ஆட்டுக் குட்டியும்

விக்கிநூல்கள் இலிருந்து

ஒரு குள்ளநரி ஒரு செம்மறி ஆட்டு மந்தைக்குள் நுழைந்தது. அங்கு பால் குடித்துக் கொண்டிருந்த ஓர் ஆட்டுக் குட்டியை பிடித்துக் கொண்டது, முத்தமிடுவது போல் நடித்தது. அது என்ன செய்து கொண்டிருக்கிறது என்று ஒரு நாய் கேட்டது. "நான் ஆட்டுக் குட்டியை அணைத்து விளையாடுகிறேன்" என்றது நரி. அதற்கு நாய் "நீ ஆட்டுக் குட்டியை விட்டு விடுவது நல்லது அல்லது உன்னுடன் நான் நாய்களின் விளையாட்டை விளையாடி விடுவேன்" என்றது.