உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் நீதிக் கதைகள்/குள்ளநரியும், எட்டாத திராட்சையும்

விக்கிநூல்கள் இலிருந்து

சில திராட்சைக் கொத்துகள் ஒரு உயர்ந்த பந்தலில் இருந்த கொடியிலிருந்து தொங்கிக் கொண்டிருப்பதை ஒரு பசியுடைய குள்ளநரி கண்டது. தன்னால் எவ்வளவு உயரத்திற்குத் தாவ முடியுமோ அவ்வளவு உயரத்திற்குத் தாவி அத்திராட்சைகளைப் பறிக்க முயற்சித்தது. ஆனால் அதன் முயற்சிகள் வெற்றியடையவில்லை. திராட்சைகள் எட்டாத உயரத்தில் இருந்தன. எனவே குள்ளநரி தனது முயற்சியைக் கைவிட்டது. மதிப்புடன் நடந்து கொள்ளவும், அதைக் கவனிக்காததாகக் காட்டிக் கொள்ளவும் "இந்தத் திராட்சைகள் இனிப்பானவை என்று நான் நினைத்தேன். ஆனால் இப்போது தெரிகிறது அவை மிகவும் புளிப்பானவை" என்றது.


நீதி: ஆடத் தெரியாதவள் தெருக் கோணல் என்றாலாம்.