உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் நீதிக் கதைகள்/குள்ளநரியும், குரங்கும்

விக்கிநூல்கள் இலிருந்து

ஒரு குள்ளநரியும் ஒரு குரங்கும் ஒன்றாக ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தன. ஆனால் இருவரில் யார் சிறந்த பிறப்பை உடையவர் என்ற வாதம் அவற்றுக்கு இடையே எழுந்தது. சிறிது நேரம் அவை விவாதித்துக் கொண்டிருந்தன. நினைவு சின்னங்களால் நிரம்பி இருந்த ஒரு இடுகாட்டுக்குள் சென்ற ஒரு சாலையைக் கொண்ட ஒரு இடத்திற்கு வரும் வரை அவை இவ்வாறு விவாதித்தன. அந்த இடத்தில் குரங்கு நடப்பதை நிறுத்தியது. குள்ளநரியைப் பார்த்து பெருமூச்சு விட்டது. "ஏன் பெருமூச்சு விடுகிறாய்" என்றது குள்ளநரி. கல்லறைகளை நோக்கிக் கை நீட்டிய குரங்கு பதில் அளிக்க ஆரம்பித்தது: "இங்கு நீ காணும் அனைத்து நினைவுச் சின்னங்களும் என்னுடைய முன்னோர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டவை. என்னுடைய முன்னோர்கள் அவர்களது காலத்தில் பெருமை பெற்றவர்களாக இருந்தனர்" என்றது. ஒரு கணத்திற்குக் குள்ளநரிக்குப் பேச்சு வரவில்லை. ஆனால் அது சீக்கிரமே மீண்டு பின்வருமாறு கூறியது "அய்யா, எந்த ஒரு பொய்யையும் நிறுத்தாதீர்கள். நீங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். உங்களது முன்னோர்கள் மீண்டும் எழுந்து உங்களது பொய்யைக் காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என்பதை நான் அறிவேன்" என்றது.


நீதி: தங்களைக் கண்டுபிடிக்க இயலாது என்பதை அறிந்து கொள்ளும் போது பெருமை பேசுபவர்கள் அதிகப்படியாக பெருமை பேசுவார்கள்.