ஈசாப் நீதிக் கதைகள்/குள்ளநரியும், சிங்கமும்
Appearance
ஒரு சிங்கத்தை அதற்கு முன்னர் என்றுமே கண்டிராத ஒரு குள்ளநரி ஒரு நாள் அதைக் கண்டது. சிங்கத்தைக் கண்டவுடனேயே சிங்கத்தின் உருவம் அதற்கு மிகவும் அச்சுறுத்தலாகத் தோன்றியது. பயத்தின் காரணமாக உயிரிழந்து விடலாமா என்ற எண்ணம் அதற்குத் தோன்றியது. சிறிது காலத்திற்குப் பிறகு, சிங்கத்தை குள்ளநரி மீண்டும் கண்டது. இந்த முறையும் பயந்தது. ஆனால், முதல் முறை சிங்கத்தைக் கண்ட போது அடைந்த அளவுக்கு அதிகமான பயத்தை அது அடையவில்லை. மூன்றாவது முறை சிங்கத்தை குள்ளநரி கண்ட போது அதற்கு அச்ச உணர்வு இல்லாது இருந்தது. சிங்கத்திடம் நேராகச் சென்றது தன் வாழ்நாள் முழுவதும் சிங்கத்தை அறிந்தது போல் அதனிடம் பேசத் தொடங்கியது.
நீதி: ஒன்றை நிறைவாக அறிந்திருக்கும் நிலையானது ஏளன உணர்வை ஏற்படுத்தும்.