உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் நீதிக் கதைகள்/குள்ளநரியும், முதலையும்

விக்கிநூல்கள் இலிருந்து

குள்ளநரியும், முதலையும் தங்களது உயர் பிறப்பு பற்றி வாதமிட்டன. முதலை தனது உடலை முழுவதுமாக நீட்டித்து தனது முன்னோர்கள் உடற்பயிற்சியாளர்களாக இருந்தனர் என்றது. நரி "நீ அதைக் கூறவே தேவையில்லை. உன்னுடைய தோலைக் கண்ட மாத்திரத்திலேயே தோல்களில் வெடிப்பு ஏற்படும் அளவுக்கு நீண்ட நாட்களாக உடற்பயிற்சிகளை செய்து வருகிறாய் என்பதை என்னால் காண முடிகிறது" என்றது.


நீதி: பொய் கூறுபவர்களை அவர்களின் செயல்கள் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.