உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் நீதிக் கதைகள்/நடிகனின் முகமூடியை கண்ட குள்ளநரி

விக்கிநூல்கள் இலிருந்து

ஒரு குள்ளநரி ஒரு நடிகரின் வீட்டிற்குள் புகுந்தது. அங்கு அது அவனது துணிமணிகளில் பிற பொருட்களுடன் ஒரு பெரிய, அழகாக வடிவமைக்கப்பட்ட ஓர் இராட்சதனின் முகமூடியைக் கண்டது. அந்த முகமூடியை தனது கால்களில் எடுத்த அது ஆச்சரியமடைந்து "என்ன ஒரு தலை! ஆனால் இந்த தலைக்கு மூளை இல்லை!" என்று கூறியது.


நீதி: வெளிப்புற தோற்றத்தை வைத்து ஒருவரது மதிப்பை அளவிட முடியாது.