உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் நீதிக் கதைகள்/நடுத்தர வயது மனிதனும், அவனது இரு மனைவியரும்

விக்கிநூல்கள் இலிருந்து

ஒரு நடுத்தர வயதுடைய மனிதனின் தலை முடிகள் நரைக்க ஆரம்பித்தன. அவனுக்கு இரண்டு மனைவியர் இருந்தனர். ஒரு மனைவி வயது முதிர்ந்தவராகவும், மற்றொரு மனைவி இளம் வயதுடையவராகவும் இருந்தனர். வயது முதிர்ந்த மனைவி தன் கணவன் தன்னை விட மிகவும் இளையவராக தோற்றம் கொண்டு இருப்பதை விரும்பவில்லை. எனவே தன் கணவன் தன்னை காண வரும் போதெல்லாம் அவனது தலையிலிருந்து கரு நிற முடிகளை பிடிங்கினார். இதன் மூலம் அவனை வயதான தோற்றத்தை அடைய வைக்க எண்ணினார். இளம் வயதுடைய மனைவி மற்றொரு புறம் தன் கணவன் தன்னை விட மிகவும் வயது முதிர்ந்தவராக காணப்படுவதை விரும்பவில்லை. தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவன் தலையிலிருந்து நரைத்த முடிகளைப் பிடுங்கினாள். தன் கணவன் தன்னை விட இளையவராகக் காணப்படுவதற்காக அவள் இவ்வாறு செய்தாள். இவ்வாறாக கடைசியில் அந்த கணவனின் தலையில் ஒரு முடி கூட இல்லாமல் போய்விட்டது.


நீதி: அனைவருக்கும் பாலன் கொடுக்க நினைப்பவர்கள் சீக்கிரமே கொடுப்பதற்கு ஒன்றும் இல்லாமல் ஆகி விடுகின்றனர்.