ஈசாப் நீதிக் கதைகள்/நிறைவேற்ற இயலாத உறுதி மொழிகள்

விக்கிநூல்கள் இலிருந்து

ஓர் ஏழை மனிதன் மிகவும் உடல் நலம் குன்றியிருந்தான். அவன் உடல் நலம் பெறுவான் என்ற நம்பிக்கையை மருத்துவர்கள் இழந்து விட்டனர். மனிதன் கடவுள்களிடம் வேண்டினான். தான் உடல்நலம் பெற்றால் கடவுளுக்கு நூறு காளை மாடுகளை பலியிடுவேன் என்று உறுதியளித்தான்.


அவன் மனைவி அவனது அருகில் அமர்ந்திருந்தாள். அவள் "இவை அனைத்திற்கும் பணத்தை நீ எங்கிருந்து பெறுவாய்?" என்றாள். அம்மனிதன் கூறினான் "கடவுள் என்னிடம் கேட்கும் நிலைக்கு நான் உடல் நலம் பெறுவேன் என நீ எண்ணுகிறாயா?" என்றான்.


நீதி: உண்மையில் தாங்கள் நிறைவேற்ற இயலாத உறுதி மொழிகளை மனிதர்கள் கொடுக்கின்றனர்.