உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் நீதிக் கதைகள்/நெருப்பில் நத்தை

விக்கிநூல்கள் இலிருந்து

ஒரு விவசாயியின் மகனான ஒரு சிறுவன் நத்தைகளை நெருப்பில் வாட்டிக் கொண்டிருந்தான். நெருப்பில் வாட்டப்பட்ட போது அவற்றிலிருந்து ஒலி எழும்பியது. அவன் கூறியதாவது "உங்கள் வீடுகள் நெருப்பில் எரிகின்றன. ஆனால் நீங்கள் செய்வதோ பாடுவது மட்டுமே" என்றான்.


நீதி: தவறான நேரத்தில் செய்யப்படும் எந்த ஒரு செயலும் விமரிசிக்கத் தக்கதாகும்.