உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் நீதிக் கதைகள்/பாட்டியும், திருட்டு மருத்துவரும்

விக்கிநூல்கள் இலிருந்து

ஒரு பாட்டிக்கு கண்ணில் பிரச்சனை ஏற்பட்டது. அவர் மருத்துவரை அழைத்தார். மருத்துவர் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டார். தன்னுடைய கண் பார்வையை சரி செய்தால் மருத்துவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுப்பேன் என்று அப்பாட்டி கூறினார். ஆனால் மருத்துவர் சரி செய்யவில்லை என்றால் தான் எந்த தொகையையும் கொடுக்க மாட்டேன் என்று அப்பாட்டி கூறினார். மருத்துவர் சிகிச்சையை தொடங்கினார். ஒவ்வொரு நாளும் பாட்டியை வந்து சந்தித்து சென்றார். அவர் கண்களில் ஒரு மருந்தை தடவுவார். மருந்து தடவிய பிறகு பாட்டிக்கு கண் பார்வை தெரியாமல் இருக்கும். அந்த நேரத்தில் வீட்டில் உள்ள ஏதாவது பொருளை மருத்துவர் எடுத்துச் சென்று விடுவார். ஒவ்வொரு நாளும் இதை அந்த மருத்துவர் தொடர்ந்து செய்து வந்தார். ஒவ்வொரு நாளும் தன்னுடைய பொருட்கள் குறைவதை அப்பாட்டி கண்டார். அப்பாட்டிக்கு கண் பார்வை பிரச்சனை சரியான போது வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் காணாமல் போய் விட்டன. ஒப்புக் கொண்ட மருத்துவ செலவை கொடுக்குமாறு மருத்துவர் கூறினார். தற்போது பாட்டியால் தெளிவாக காண இயல்வதால் கொடுக்குமாறு கூறினார். அந்த ஒப்பந்தத்துக்கு சாட்சிகளானவர்களையும் மருத்துவர் அழைத்தார். பாட்டி எதிர்ப்பு தெரிவித்தார். "என்னால் எதையும் காண இயலவில்லை. எனது கண்களில் பிரச்சனை இருந்த போது கூட எனது வீட்டில் இருந்த பல பொருட்களை என்னால் காண முடிந்தது. தற்போது நீங்கள் என் கண் பிரச்சனையை சரி செய்து விட்டதாக கூறுகிறீர்கள். ஆனால் என்னால் எதையும் காண இயலவில்லை" என்றார் பாட்டி.


நீதி: தீயவர்கள் தங்களது சொந்த செயல்கள் மூலம் தங்களை அறியாமலேயே தங்களுக்கு எதிரான சாட்சிகளாக மாறி விடுகின்றனர்.