உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் நீதிக் கதைகள்/பூனையும், சேவலும்

விக்கிநூல்கள் இலிருந்து

ஒரு பூனை ஒரு சேவல் கோழி மீது பாய்ந்தது. அதை உண்பதற்குக் காரணம் தேடியது. ஏனெனில், சேவல் கோழிகளைப் பூனைகள் உண்பது என்பது விதி கிடையாது. பூனைக்குத் தெரியும் அது உண்ணக் கூடாது என்று, இறுதியாக அது கூறியது "இரவில் கொக்கரித்ததன் மூலம் நீ மக்களை எழுப்பி விட்டாய். எனவே உன்னை நான் கொல்லப் போகிறேன்" என்றது. ஆனால் சேவல் தன் பக்க நியாயத்தைப் பின்வருமாறு கூறியது "மனிதர்கள் நேரத்திற்கு விழித்து தங்களது அந்த நாள் பணியை நல்ல நேரத்தில் தொடங்க வேண்டும் என்பதற்காகவே நான் கொக்கரித்தேன்" என்று கூறியது. நான் இல்லாமல் மனிதர்களால் நல்ல முறையில் வாழ முடியாது என்றது. "இருக்கட்டும்" என்றது பூனை. "ஆனால் அவர்களால் முடியுமோ முடியாதோ, நான் என்னுடைய இரவு உணவை உண்ணாமல் இருக்கப் போவதில்லை" என்றாது. இறுதியாக பூனை சேவல் கோழியைக் கொன்று உண்டது.


நீதி: எந்த ஒரு சிறந்த விளக்கமும் ஒரு வில்லனை அவன் குற்றமிழைப்பதில் இருந்து தடுப்பதில்லை.