உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் நீதிக் கதைகள்/பெண்ணும், அதிகப்படியாக வேலை வாங்கப்பட்ட அவளது பணிப் பெண்களும்

விக்கிநூல்கள் இலிருந்து

கடினமான பணி செய்த ஒரு விதவை பெண்ணிடம் சில பணிப்பெண்கள் இருந்தனர். வெளியில் இருளாக இருக்கும் போது, சேவல் கொக்கரிக்கும் போது அப்பணிப் பெண்களை அவள் எழுப்புவாள். அப்பணிப் பெண்களுக்கு முடிவில்லாத பணிகள் கொடுத்து சுமைப்படுத்தப்பட்டனர். எனவே அப்பெண்கள் இருளாக இருக்கும் போது தினமும் தங்களது எசமானியை எழுப்பும் சேவலை கொன்று விடுவது ஒரு நல்ல யோசனையாக இருக்கும் என்று முடிவு செய்தனர். எனினும் அவர்கள் சேவலைக் கொன்ற பிறகு அவர்களது நிலைமை இன்னும் மோசமானது. தற்போது சேவல் கொக்கரிக்காததால் எசமானி சரியான நேரத்தை கணிக்க இயலாமல் இருந்தார். அதன் காரணமாக தற்போது இன்னும் அதிகாலை நேரத்திலேயே பணிப் பெண்களை அவர் எழுப்பி வேலை வாங்க ஆரம்பித்தார்.


நீதி: சில நேரங்களில் சிலர் போடும் திட்டங்கள் அவர்களுக்கு பிரச்சனையாக வந்து முடிகின்றன.