உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் நீதிக் கதைகள்/மரக்கரி எரிப்பவனும், சலவைக்காரனும்

விக்கிநூல்கள் இலிருந்து

ஒரு காலத்தில் ஒரு மரக்கரி எரிப்பவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் பணிகளை தானே செய்து வந்தான். எனினும் ஒரு சலவைக்காரன் அப்பகுதிக்கு வந்தான். மரக்கரி எரிப்பவனுக்கு அருகிலேயே தங்கினான். அவனைச் சந்தித்த மரக்கரி எரிப்பவன் தன்னுடன் ஒத்துப் போகும் இயல்பு சலவைக்காரனுக்கு இருப்பதை அறிந்தான். தன்னுடன் வந்து தனது வீட்டை பகிர்ந்து கொள்வானா என்று சலவைக்காரனிடம் கேட்டான். "நாம் இருவரும் ஒருவரையொருவர் இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்" என்றான். மேலும் "நமது வீட்டுச் செலவுகளும் குறையும்" என்றான். சலவைக்காரன் அவனுக்கு நன்றி தெரிவித்தான். ஆனால் "என்னால் அவ்வாறு செய்ய முடியாது; ஏனெனில் நான் சிரமப்பட்டு வெளுப்பவை உடனேயே மரக்கரியால் கருப்பாகி விடும்" என்று கூறினான்.

நீதி: ஒரே மாதிரியான நபர்கள் இணைந்தால் நன்முறையில் செயலாற்ற முடியும்.