உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் நீதிக் கதைகள்/மரநாயும், அபுரோதைத் கடவுளும்

விக்கிநூல்கள் இலிருந்து

ஒரு மரநாய் ஒரு இளைஞனை திருமணம் செய்து கொள்ள விரும்பியது. அபுரோதைத் எனும் பெண் கடவுள் அந்த மரநாயை ஒரு பெண்ணாக மாற்றியது. இதன் மூலம் இந்த அழகான பெண்ணை திருமணம் செய்து கொள்ள அனைவரும் விரும்புவார்கள் என்று மாற்றியது. அந்த இளைஞனும் அப்பெண்ணைக் கண்டவுடன் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். திருமண விருந்து நடந்து கொண்டிருந்த பொழுது ஒரு எலி ஓடியது. தன்னுடைய அலங்கரிக்கப்பட்ட ஆசனத்திலிருந்து மணப் பெண் கீழே குதித்தாள். அந்த எலியைத் துரத்த ஆரம்பித்தாள். இவ்வாறாக திருமணம் நின்று போனது.


நீதி: விருப்பத்தை விட இயற்கை வலிமையானது.