உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் நீதிக் கதைகள்/மரநாயும், அரமும்

விக்கிநூல்கள் இலிருந்து

ஒரு மரநாய் ஓர் இரும்பு கொல்லனின் கடைக்குள் சென்றது. அங்கு இரும்பு அரம் இருந்த இடத்திற்கு வந்தது. இரும்பு அரத்தை உண்ணும் ஒரு பைத்தியக்கார முயற்சியாக தனது நாவின் மூலம் மகிழ்ச்சியுடன் அந்த அரத்தை நக்க ஆரம்பித்தது. மரநாயின் நாக்கில் இரத்தம் வர ஆரம்பித்து. இது அதை இன்னும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. இரத்தத்தின் சுவையானது உண்மையில் அது அரத்தை சுவைத்து கொண்டிருப்பதாக எண்ண செய்தது. இவ்வாறாக தன்னுடைய நாக்கை முழுவதுமாக இழக்கும் வரை அந்த மரநாய் தொடர்ந்து நக்கிக் கொண்டிருந்தது.


நீதி: ஒன்றுக்கும் பயனில்லாத செயலில் தாங்கள் ஏதோ ஆதாயம் பெறுவதாக என்னும் மக்கள் தாங்களே அழிந்து போகும் வரையில் அதில் ஆர்வமாக ஈடுபடுகின்றனர்.