உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் நீதிக் கதைகள்/மீனவனும், சிறு மீனும்

விக்கிநூல்கள் இலிருந்து

ஒரு மீனவன் தன்னுடைய வலையைக் கடலில் வீசினான். அவன் வலையை இழுத்த போது அதில் ஒரு சிறிய மீன் மட்டுமே இருந்தது. அது தன்னை மீண்டும் நீரில் விட்டு விடுமாறு கெஞ்சியது. "நான் இப்பொழுது ஒரு சிறிய மீன் மட்டுமே" என்றது. "ஆனால் ஒரு நாள் நான் பெரிதாக வளர்வேன். அப்போது நீங்கள் வந்தால், என்னை நீங்கள் மீண்டும் பிடித்தால், அந்நிலையில் நான் உங்களுக்குப் பயனுள்ளதாக இருப்பேன்" என்றது. ஆனால் மீனவன் பதிலளித்தான் "இல்லை. நான் தற்போது உன்னை பிடித்து இருப்பதால், வைத்துக் கொள்ள வேண்டும். நான் உன்னை விட்டால், உன்னை மீண்டும் என்றாவது காண முடியுமா? முடியாது!".


நீதி: பெறுவதற்கு வாய்ப்புள்ள பெரிய பொருளை விட, கையில் இருக்கும் சிறிய பொருளுக்கு மதிப்பு அதிகம்.