உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் நீதிக் கதைகள்/மீனவர்களும், சூரை மீனும்

விக்கிநூல்கள் இலிருந்து

சில மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகும் அவர்களால் எதையும் பிடிக்க இயலவில்லை. வலையை மடித்து அவர்கள் திரும்புவதற்கு முடிவெடுத்தனர். அப்போது திடீரென ஒரு பெரிய மீனால் துரத்தப்பட்ட ஒரு சூரை மீன் அவர்களது படகு மீது தாவி விழுந்தது. அந்த மீனவர்கள் சூரை மீனை பிடித்தனர். வீட்டிற்கு மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றனர்.