உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் நீதிக் கதைகள்/மீன்களுக்குப் புல்லாங்குழல் வாசித்த மீனவர்

விக்கிநூல்கள் இலிருந்து

புல்லாங்குழல் வாசிக்கத் தெரிந்த ஒரு மீனவன் ஒரு நாள் தன்னுடைய வலைகள் மற்றும் புல்லாங்குழலை எடுத்துக் கொண்டு கடற்கரைக்குச் சென்றான். ஒரு பாறையில் அமர்ந்து கொண்டு புல்லாங்குழலை வாசிக்கத் தொடங்கினார். இசையானது கடலில் இருந்து மீன்களைத் துள்ளிக் குதித்து வெளி வரச் செய்யும் என்று எண்ணினார். புல்லாங்குழலை சில நேரத்திற்குத் தொடர்ந்து வாசித்தார். ஆனால் ஒரு மீன் கூட தோன்றவில்லை. எனவே இறுதியாக தனது புல்லாங்குழலை தூக்கி எறிந்து விட்டு தனது வலையை கடலில் வீசினர். ஏராளமான மீன்களைப் பிடித்தார். மீன்கள் தரையில் விழுந்த போது அவை கடற்கரையில் துள்ளிக் குதிப்பதை கண்ட அவர் "போக்கிரிகளே! நான் உங்களுக்குப் புல்லாங்குழல் வாசித்த போது நீங்கள் நடனமாடவில்லை. ஆனால் புல்லாங்குழலை வாசிப்பதை நிறுத்திய பிறகு நடனம் ஆடுவதைத் தவிர வேறு எதையும் நீங்கள் செய்யவில்லை!" என்று கூறினார்.


நீதி: ஒருவன் தனக்குத் தெரிந்த தொழிலைச் செய்ய வேண்டும்.