ஈசாப் நீதிக் கதைகள்/முதியவரும், இறப்பும்

விக்கிநூல்கள் இல் இருந்து

ஒரு ஏழை மனிதன் தன்னுடைய தோளில் விறகுகளை சுமந்து சென்றான். சில நேரத்திற்கு பிறகு அவனுக்கு மயக்கம் வருவது போல் இருந்தது. எனவே அவன் சாலையின் பக்கவாட்டில் கீழே அமர்ந்தான். தன்னுடைய விறகை அருகில் வைத்து விட்டு வெறுப்பில் மரணம் வேண்டும் என்று அழைப்பு விடுத்தான். "மரணமே" என்று அதை அழைத்தான். மரணம் உடனடியாக அங்கு வந்து நின்றது. மனிதனிடம் "நீ ஏன் என்னை அழைத்தாய்?" என்று கேட்டது. மனிதன் கூறினான் "இல்லை, தரையில் இருக்கும் இந்த சுமையை என் தோள்களில் ஏற்றுவதற்கு உதவி புரிவதற்காகவே உன்னை அழைத்தேன்" என்றான்.


நீதி: தாங்கள் எவ்வளவு துன்பம் மற்றூம் ஒடுக்கு முறையில் இருந்தாலும் உயிர் வாழவே ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்.