ஈசாப் நீதிக் கதைகள்/வயிற்று வலியுடைய சிறுவன்
Appearance
ஒரு மக்கள் கூட்டமானது பெண் தெய்வம் திமேத்தருக்கு ஒரு காளையை பலியிட்டனர். அகண்ட பரப்பில் இலைகளை தூவினர். மேசைகளில் தட்டுகளில் மாமிசம் வைக்கப்பட்டது. பேராசை கொண்ட ஒரு சிறுவன் மாட்டு குடல் நாளங்களை வயிறு முட்ட முழுவதுமாக உண்டான். வீட்டுக்கு செல்லும் வழியில் அவனுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. தனது தாயின் மடியில் விழுந்தவன் வாந்தி எடுத்தான். "நான் இறக்க போகிறேன் தாயே, எனது அனைத்து குடல் நாளங்களும் வெளியே விழுகின்றன" என்றான். தாய் அளித்த பதிலானது "தைரியமாக அனைத்தையும் வாந்தி எடுத்து விடு. எதையும் வைத்துக் கொள்ளாதே. நீ வாந்தி எடுப்பது உனது குடல் நாளங்கள் அல்ல. அவை காளையின் குடல் நாளங்கள்" என்றான்.
நீதி: ஓர் ஆதரவற்றவரின் சொத்தை ஊதாரித் தனமாக செலவு செய்த ஒருவன், அதை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நிலை வரும் போது அழுகிறான்.