உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் நீதிக் கதைகள்/வால் இல்லாத குள்ளநரி

விக்கிநூல்கள் இலிருந்து

ஒரு குள்ளநரி ஒரு முறை ஒரு கண்ணியில் மாட்டிக் கொண்டது. ஒரு போராட்டத்திற்குப் பிறகு அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது. ஆனால் அப்போராட்டத்தில் தன்னுடைய வாலை இழந்தது. அது தன்னுடைய தோற்றத்தைக் கண்டு மிகவும் வெட்கம் அடைந்தது. தான் உயிர் வாழ்வதற்குத் தகுதியற்றது என்று எண்ணியது. இதன் காரணமாக வாலை வெட்டி விடுமாறு மற்ற குள்ளநரிகளையும் இணங்க வைக்க வேண்டும் என நினைத்தது. இவ்வாறாக தன்னுடைய சொந்த இழப்பிலிருந்து மற்றவர்களின் கவனத்தைத் திசை திருப்பலாம் என்று எண்ணியது. எனவே அது அனைத்து குள்ள நரிகளின் ஒரு சந்திப்புக்கு அழைப்பு விடுத்தது. அவற்றின் வால்களை வெட்டி விடுமாறு அவற்றிற்கு அறிவுரை கூறியது. "எவ்வாறிருந்தாலும் இந்த வால்கள் அசிங்கமான உறுப்புகள் ஆகும். மேலும் அவை கனமாகவும் உள்ளன. உங்களுடன் இந்த வால்களைச் சுமந்து கொண்டிருப்பதும் ஒரு சோர்வடையச் செய்யும் பணியாக இருக்கும்." ஆனால் பிற குள்ளநரிகளில் ஒன்று கூறியது, "என் நண்பா, நீ உனது சொந்த வாலை இழந்து இருக்காவிட்டால், எங்களது வால்களும் வெட்டப்பட வேண்டும் என்பதில் உனக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு இருக்காது".


நீதி: உனக்கு அறிவுரை கூறுவதன் மூலம் ஆதாயம் பெறுபவர்களை நீ நம்பாதே.